பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் மீண்டும் மாறாமல் இருப்பதை உறுதி செய்வோம்: வெள்ளை மாளிகை| Dinamalar

பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் மீண்டும் மாறாமல் இருப்பதை உறுதி செய்வோம்: வெள்ளை மாளிகை

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (3)
Share
வாஷிங்டன்: வரும் வெள்ளியன்று நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி சந்திப்பில், 'அவர்கள் மீண்டும் ஆப்கன் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறாது என்பதை உறுதி செய்யும் வழிகள் குறித்து விவாதிப்பார்கள்' என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11-க்குள் அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற அதிபர் பைடன்

வாஷிங்டன்: வரும் வெள்ளியன்று நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி சந்திப்பில், 'அவர்கள் மீண்டும் ஆப்கன் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறாது என்பதை உறுதி செய்யும் வழிகள் குறித்து விவாதிப்பார்கள்' என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.



latest tamil news




ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் 11-க்குள் அமெரிக்க படைகள் மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை முதன் முறையாக ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனியை நேரடியாக சந்தித்து பேசுகிறார் பைடன். துருப்புகளை விலக்கிக்கொள்ளும் அதே சமயம் மனிதாபிமான உதவிகளைத் தொடர்ந்து செயல்படுத்த எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது பற்றி விவாதிக்க உள்ளனர். மேலும், பயங்கரவாத குழுக்களுக்கு, ஆப்கன் மீண்டும் பாதுகாப்பான புகலிடமாகாது என்பதை உறுதிப்படுத்த எவ்வாறு இணைந்து செயல்படுவது என்பது பற்றியும் பேச இருப்பதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது.


latest tamil news



பைடன் - கனி இடையேயான உயர்மட்ட சந்திப்பு நடக்க உள்ள நிலையில், மே 1 முதல் ஆப்கானிஸ்தானில் புதிய மாவட்டங்களை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனர். திங்களன்று வடக்கு குந்தூஸ் மாகாணத்தில் ஒரு முக்கிய மாவட்டத்தினை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக செய்தி வெளியானது.

அங்கிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஆப்கன் - தஜிகிஸ்தான் எல்லைப் பகுதியான ஷேர் கான் பந்தரை இன்று (ஜூன், 22) கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிய பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையிலான சண்டை அதிகரிப்பது அமெரிக்கா தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X