சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

மொட்டை தலைக்கும்...!

Added : ஜூன் 22, 2021
Share
Advertisement
மொட்டை தலைக்கும்...!'மனிதாபிமானத்துடன் செய்யும் உதவிகளை அரசியல் நோக்கத்துடன் பார்க்கின்றனரே...' என, வேதனைப்படுகிறார், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி.முகேஷ் அம்பானி, தொழில் துறையில் வெற்றிகரமாக வலம் வருவதற்கு மிகவும் உதவியாக இருப்பவர் நீட்டா. இவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்;

அக்கம் பக்கம்


மொட்டை தலைக்கும்...!


'மனிதாபிமானத்துடன் செய்யும் உதவிகளை அரசியல் நோக்கத்துடன் பார்க்கின்றனரே...' என, வேதனைப்படுகிறார், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி.முகேஷ் அம்பானி, தொழில் துறையில் வெற்றிகரமாக வலம் வருவதற்கு மிகவும் உதவியாக இருப்பவர் நீட்டா. இவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார்; ரிலையன்ஸ் என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேயின் வேண்டுகோளுக்கு ஏற்ப, மும்பை போலீசாரின் ரோந்து பணிகளுக்காக, ஏராளமான மின்சார வாகனங்களை, தன் அறக்கட்டளை சார்பில் கொடுத்து உதவினார் நீட்டா.இந்த விஷயம் தான், மஹாராஷ்டிரா அரசியலில் விவாத பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில், மும்பையில் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, சக்தி வாய்ந்த வெடி பொருட்களுடன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முகேஷ் அம்பானியின் தொழில் எதிரிகள் இந்த சதித் திட்டத்தை அரங்கேற்றியிருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. மும்பை போலீசார் வேகமாக செயல்பட்டு, சில முக்கிய நபர்களை கைது செய்தனர். இந்த விஷயத்தை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர், 'முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிகுண்டு காரை கண்டுபிடித்த போலீசாருக்கு பரிசாக, ரோந்து கார்களை நீட்டா அளித்துள்ளார்; எல்லாமே டிராமா' என்கின்றனர். 'மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும்' என, புலம்புகிறார் நீட்டா அம்பானி.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X