2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

2 நாட்களில் ரூ.55 குறைந்த சிமெண்ட் விலை!

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (22)
Share
சென்னை:முதல்வர் ஸ்டாலினின் தலையீட்டால் ஏற்கனவே 30 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் குறைந்து 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது.சிமெண்ட் விலை மூடைக்கு மேலும் 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி, 490 ரூபாய் ஆக இருந்த ஒரு மூடை

சென்னை:முதல்வர் ஸ்டாலினின் தலையீட்டால் ஏற்கனவே 30 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 25 ரூபாய் குறைந்து 2 நாட்களில் 55 ரூபாய் சரிந்துள்ளது.சிமெண்ட் விலை மூடைக்கு மேலும் 25 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.



latest tamil news



சட்டப்பேரவையில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி, 490 ரூபாய் ஆக இருந்த ஒரு மூடை சிமெண்ட் விலையை, 460 ரூபாயாகவும், ஒரு டன் கம்பியின் விலை 1100 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


latest tamil news




இந்த நிலையில் தென்னிந்திய சிமெண்ட் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று, தற்போதைய விலையில் இருந்து மேலும் 25 ரூபாய் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிமெண்ட் விலை 435 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X