போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி: ராகுல் வலியுறுத்தல்

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (15+ 34)
Share
Advertisement
புதுடில்லி :''கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகும் வகையில் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகள் போட வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தினார். மூன்றாவது அலைநாட்டில் கொரோனா பாதிப்பு பற்றிய வெள்ளையறிக்கையை, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நேற்று வெளியிட்ட பின், ராகுல் கூறியதாவது:கொரோனா தொற்றை மத்திய அரசு சரியாக
போர்க்கால அடிப்படை, தடுப்பூசி , ராகுல் வலியுறுத்தல்

புதுடில்லி :''கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள தயாராகும் வகையில் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசிகள் போட வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தினார்.


மூன்றாவது அலை



நாட்டில் கொரோனா பாதிப்பு பற்றிய வெள்ளையறிக்கையை, 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக நேற்று வெளியிட்ட பின், ராகுல் கூறியதாவது:கொரோனா தொற்றை மத்திய அரசு சரியாக கையாளவில்லை என குறை சொல்வதற்காக, இந்த வெள்ளையறிக்கையை வெளியிடவில்லை. மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாட்டுக்கு உதவும் நோக்கில் தான் இந்த வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மோசமான நிர்வாகத்தால் முதல் மற்றும் இரண்டாவது அலையில் பேரழிவு ஏற்பட்டது, அனைவருக்கும் தெரியும்.

இதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இரண்டாவது அலை வீசியபோது பிரதமர் மோடி அதில் கவனம் செலுத்தாமல், மேற்கு வங்க தேர்தலில் கவனம் செலுத்தினார். பிரதமரின் கண்ணீர், கொரோனாவால் இறந்தவர்களை காப்பாற்றவில்லை. ஆனால், ஆக்சிஜன் காப்பாற்றும்.வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைவதால், மூன்றாவது அலையை தொடர்ந்து, மேலும் பல அலைகள் வரும் என்கிறார்கள். மூன்றாவது அலையை எதிர்கொள்ள, நாம் இப்போதே தயாராக வேண்டும்.




50 சதவீதம்



தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம். மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்த வேண்டும். 50 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட்டால் போதாது; அனைவருக்கும் போட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


'தொற்று குறைவதால் ராகுலுக்கு கவலை'



பா.ஜ., செய்தி தொடர்பாளர் சம்பித் பாத்ரா கூறியதாவது:கொரோனா விவகாரத்தில் ராகுல் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார். தொற்று பரவல் குறைவது, அவருக்கு வருத்தமாக உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில், நாட்டில் 87 லட்சம் 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டது.
இதை கேட்டதும் கொரோனா பற்றிய வெள்ளையறிக்கையை வெளியிட்டு, மத்திய அரசு மீது ராகுல், குறை கூறியுள்ளார்.ஏனெனில் நாட்டில் நல்லது நடந்தால், அதை தடுக்க காங்கிரசும், ராகுலும் முயற்சிப்பது வழக்கமானது தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15+ 34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
23-ஜூன்-202121:08:05 IST Report Abuse
சோணகிரி இவங்கப்பா ராஜீவ் இப்படியெல்லாம் பினாத்தினது இல்லையே... இவர் ஏன் இப்படி பினாத்துறார்...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-ஜூன்-202121:05:36 IST Report Abuse
sankaseshan பொறாமை பொறாமை படறதை குறைச்சுக்கோ
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
23-ஜூன்-202120:35:28 IST Report Abuse
Narasimhan கண் கேட்டபின் சூரிய நமஸ்காரம். உங்களை போன்ற தேசத்துரோகிகள் யாரும் இருக்க முடியாது. தடுப்பூசி அறிமுகம் செய்த போது மக்களை அவ்வளவு பயமுடுத்திவிட்டு இப்போது உன் அறிவுரை யாருக்கும் தேவையில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X