பொது செய்தி

இந்தியா

இரண்டாம் அலை முடிந்துவிட்டதா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :'நாடு முழுதும் 15 நாட்களாக தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளதை அடுத்து, இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கக் கூடாது' என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாடு முழுதும் 42 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனாதொற்று நேற்று உறுதியானது. கடந்த 91 நாட்களில் தொற்று விகிதம், நேற்று 3.21 சதவீதமாக குறைந்தது. 'தொற்று உறுதி
Corona Second Wave, delta plus variant, India Fights Corona

புதுடில்லி :'நாடு முழுதும் 15 நாட்களாக தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளதை அடுத்து, இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கக் கூடாது' என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுதும் 42 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனாதொற்று நேற்று உறுதியானது. கடந்த 91 நாட்களில் தொற்று விகிதம், நேற்று 3.21 சதவீதமாக குறைந்தது. 'தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 14 நாட்களுக்கு மேல் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் தளர்வுகளை முழுமையாக விலக்கி கொள்ளலாம்' என, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

நம் நாட்டை பொறுத்தவரை கடந்த 15 நாட்களாக தொற்று விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனவே, கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக, பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர். மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, முழு வேகத்தில் தயாராகி வருகின்றனர். ஆனால் நிபுணர்களோ வேறு விதமாக எச்சரிக்கின்றனர்.


'டெல்டா பிளஸ்'


டில்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியல் துறையின் இணை பேராசிரியர் நாக சுரேஷ் கூறியாவது:தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் இருப்பதால், இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதக்கூடாது. 'டெல்டா பிளஸ்' எனும் உருமாற்றம் அடைந்துள்ள வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

கடந்த பிப்ரவரியில் முதல் அலையின் விகிதம் 1 சதவீதமாக இருந்தபோது நாம் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினோம். அந்த நேரத்தில் தான் மார்ச்சில் 2வது அலை தீவிரமாக பரவியது.இப்போதும் பல மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது.எனவே நாடு முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு வாரங்களுக்கும் மேல், தொற்று உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே, இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததாக எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
23-ஜூன்-202108:38:45 IST Report Abuse
VENKATASUBRAMANIAN மக்கள் திருந்த மாட்டார்கள். அவர்களுக்கு உயிரை விட இறைச்சி மது இவைதான் முக்கியம். படித்ததாவர்களைத்தான் முதலில் தண்டிக்க வேண்டும். அவர்கள்தான் எதையும் மதிப்பதில்லை. அரசு டாஸ்மாக் ஐ திறந்து விட்டது. ஒரு km மேல் வரிசையில் நின்று வாங்குகிறார்கள். ஆனால் வேறு இடங்களுக்கு முட்டி மோதி கொண்டு செல்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் உயிர் முக்கியம் இல்லை.
Rate this:
Cancel
23-ஜூன்-202108:22:05 IST Report Abuse
ஆப்பு நல்லா எடுத்து சொல்லுங்க சாரே. இல்லேன்னா தேர்தல் கமிஷனை ஏவி தேர்தல் அறிவிச்சு பறந்து வந்து பரப்புரை செஞ்சு பரப்புவாங்க. கும்பமேளா, உலக மூர்க்கர் மாநாடு, சுவிசேஷக் கூட்டம் எல்லாத்துக்கும் அடுத்த 5 வருஷம் தடை போடச் சொல்லுங்க.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
23-ஜூன்-202107:47:49 IST Report Abuse
blocked user 60% க்கு மேல் தடுப்பூசி போட்டால் நிலைமை சற்று மேம்படும். அதுவரை அலை அடித்துக்கொண்டுதான் இருக்கும். பொதுமக்களும் அரசு சொல்வதைக்கேட்டு நடந்து கொண்டால் நல்லது. பணமிருப்போர் சமூகமாக ஒன்றிணைந்து மனிதநேயத்துடன் ஏழை எழியோரை பாதுகாக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X