இரண்டாம் அலை முடிந்துவிட்டதா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இரண்டாம் அலை முடிந்துவிட்டதா? நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி :'நாடு முழுதும் 15 நாட்களாக தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளதை அடுத்து, இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கக் கூடாது' என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.நாடு முழுதும் 42 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனாதொற்று நேற்று உறுதியானது. கடந்த 91 நாட்களில் தொற்று விகிதம், நேற்று 3.21 சதவீதமாக குறைந்தது. 'தொற்று உறுதி
Corona Second Wave, delta plus variant, India Fights Corona

புதுடில்லி :'நாடு முழுதும் 15 நாட்களாக தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதத்துக்கு கீழ் குறைந்துள்ளதை அடுத்து, இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக நினைக்கக் கூடாது' என, நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுதும் 42 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனாதொற்று நேற்று உறுதியானது. கடந்த 91 நாட்களில் தொற்று விகிதம், நேற்று 3.21 சதவீதமாக குறைந்தது. 'தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 14 நாட்களுக்கு மேல் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் தளர்வுகளை முழுமையாக விலக்கி கொள்ளலாம்' என, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

நம் நாட்டை பொறுத்தவரை கடந்த 15 நாட்களாக தொற்று விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. எனவே, கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக, பல்வேறு தரப்பினரும் கருதுகின்றனர். மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப, முழு வேகத்தில் தயாராகி வருகின்றனர். ஆனால் நிபுணர்களோ வேறு விதமாக எச்சரிக்கின்றனர்.


'டெல்டா பிளஸ்'


டில்லி ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தின் இயற்கை அறிவியல் துறையின் இணை பேராசிரியர் நாக சுரேஷ் கூறியாவது:தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் 5 சதவீதத்துக்கும் கீழ் இருப்பதால், இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதக்கூடாது. 'டெல்டா பிளஸ்' எனும் உருமாற்றம் அடைந்துள்ள வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

கடந்த பிப்ரவரியில் முதல் அலையின் விகிதம் 1 சதவீதமாக இருந்தபோது நாம் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினோம். அந்த நேரத்தில் தான் மார்ச்சில் 2வது அலை தீவிரமாக பரவியது.இப்போதும் பல மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் மேலாக உள்ளது.எனவே நாடு முழுதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு வாரங்களுக்கும் மேல், தொற்று உறுதியாகும் விகிதம் 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே, இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததாக எடுத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X