திருமணம் குறித்த தகவல்: சிக்கலில் திரிணமுல் எம்.பி.,

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்., - எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி, தன்திருமணம் தொடர்பாக தவறான தகவலை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தி உள்ளார். திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த லோக்சபா எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி. இவர் மேற்கு வங்கத்தில் பிரபலமான நடிகை. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,
திருமணம்,தகவல்:  சிக்கல், திரிணமுல் எம்.பி.,

புதுடில்லி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்., - எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி, தன்திருமணம் தொடர்பாக தவறான தகவலை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தி உள்ளார்.

திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த லோக்சபா எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி. இவர் மேற்கு
வங்கத்தில் பிரபலமான நடிகை. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'எனக்கும், நிக்கில் ஜெயின் என்பவருக்கும் வெளிநாட்டில் வைத்து திருமணம் நடந்தது. அதை இந்தியாவில் பதிவு செய்யவில்லை.தற்போது நாங்கள் பிரிந்துவிட்டோம். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக தான் கருதப்படும். எனவே அதற்கு விவாகரத்து தேவையில்லை' எனக் கூறினார்.


latest tamil news



இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜ., - எம்.பி., சங்கமித்ர மவுரியா, சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிஉள்ளார்.
அதன் விபரம்:
நஸ்ரத் ஜஹான் லோக்சபா தேர்தலுக்காக தாக்கல் செய்த வேட்பு மனுவில்,
தன் கணவர் பெயர், நிக்கில் ஜெயின் எனக் குறிப்பிட்டுள்ளார். அவர், பதவிப் பிரமாணம் ஏற்கையில் தன் பெயரை, நஸ்ரத் ஜஹான் ருஹி ஜெயின் என தெரிவித்தார்.
இப்படி இருக்கையில், தன் திருமணம் குறித்து நஸ்ரத் தெரிவிக்கும் கருத்து,
முன்னுக்கு பின் முரணாக உள்ளது. தவறான தகவலை தெரிவித்துள்ள அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
23-ஜூன்-202108:30:21 IST Report Abuse
VENKATASUBRAMANIAN மோடியின் certificate ஐ வைத்து என்ன செய்ய போகிறீர்கள். மலைக்கும் மடுவுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்
Rate this:
Cancel
rajan - erode,இந்தியா
23-ஜூன்-202107:54:40 IST Report Abuse
rajan மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்., - எம்.பி., நஸ்ரத் ஜஹான் ருஹி, தன்திருமணம் தொடர்பாக தவறான தகவலை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தி உள்ளார். - பாராளுமன்ற தேர்தலுக்கு முன் வரை மோடி செய்த திருமணம் தொடர்பாக தவறான தகவலை வேட்பு மனுவில் தெரிவித்துள்ளதை அடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பா.ஜ., - எம்.பி., வலியுறுத்தி உள்ளார்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-ஜூன்-202107:43:03 IST Report Abuse
RajanRajan இங்கேதான் கள்ளத்தொடர்பு கூட குற்றமில்லைனு சட்டம் சொல்லுறப்ப ஏன் இப்படி கூப்பாடு போடுறீங்க இந்த சந்தையிலே. துணைவன் மணாளன் கலவன் என சேர்த்து போட்டுக்க வேண்டியது தானே. அப்போ தானே முழு அரசியல்வாதியாக முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X