இந்தாண்டு நீட் தேர்வு உண்டா; இல்லையா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தாண்டு 'நீட்' தேர்வு உண்டா; இல்லையா?

Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை : 'கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று சட்டசபையில் வலியுறுத்தினார். 'இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா; இல்லையா' என்ற அவரதுகேள்விக்கு, அரசு தரப்பில் பதில் எதுவும் தரப்படவில்லை.எதிர்பார்ப்பு சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்
 இந்தாண்டு 'நீட்' தேர்வு உண்டா; இல்லையா?

சென்னை : 'கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், நேற்று சட்டசபையில் வலியுறுத்தினார்.

'இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா; இல்லையா' என்ற அவரதுகேள்விக்கு, அரசு தரப்பில் பதில் எதுவும் தரப்படவில்லை.எதிர்பார்ப்பு சட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:அ.தி.மு.க., எதிரி கட்சி அல்ல. அரசுக்கு தேவையான ஆலோசனைகளை கூறி, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். கொரோனா இல்லாத தமிழகம், இந்தியா உருவாக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.முதன் முதலாக, சீனாவின் வூகான் நகரில், கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட போது, அதன் தாக்கம் எப்படி இருக்கும் என தெரியாது; மருந்து கிடையாது.

இந்த சூழலில், கொரோனாவை எதிர்த்து, ஜெ., அரசு திறம்பட செயலாற்றியது.வலுவான சுகாதார கட்டமைப்பை ஏற்படுத்தினோம். கொரோனா முதல் அலையில் சிறப்பாக செயல்பட்டோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 481 ஆக குறைந்தது. மூன்றாவது அலை வருமாதேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின் தொய்வு ஏற்பட்டது. புதிய ஆட்சி பொறுப்பேற்ற போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து, 470 ஆக உயர்ந்தது, சவாலாக அமைந்தது. தற்போது 7,427 ஆக குறைந்துள்ளது.இது, மன நிம்மதியை அளித்தாலும், இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில், மறுவாழ்வு மையங்களை துவக்க வேண்டும். மருத்துவமனைகளை, கொரோனாவுக்கு சிகிச்சை; கொரோனா அல்லாதோருக்கு சிகிச்சை; கொரோனா பின்விளைவு சிகிச்சை என, மூன்றாக பிரிக்க வேண்டும்.மூன்றாவது அலை வருமா, வராதா என்ற விவாதத்திற்கு உள்ளே செல்லாமல், வரும் என நினைத்து, சுகாதார கட்டமைப்பு களை மேலும் உருவாக்க வேண்டும்.மூன்றாவது அலையால் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்கின்றனர். குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், உடன் ஒருவர் இருக்க வேண்டும்.

மக்கள் அச்சம் : இதை கவனத்தில் வைத்து, படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். கொரோனாவை தடுக்க முக கவசம் ஆயுதம்; தடுப்பூசி பேராயுதம். எனவே, தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி தொடர்பாக, மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க வேண்டும். 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே அ.தி.மு.க.,வின் நிலைப்பாடு. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என, தேர்தல் வாக்குறுதி அளித்தீர்கள். இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா; இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாததால், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, இ.பி.எஸ்., நிறைவேற்றினார். அதை கூடுதலாக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்தது. அது குறித்தும் தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கு பதில் அளித்து, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, தினசரி கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து, 465 ஆக இருந்தது. அதன்பின் 36 ஆயிரத்து, 184 ஆக உயர்ந்தது.முதல்வர் எடுத்த நடவடிக்கைகளால், தற்போது நோய் தொற்று 7,427 ஆக குறைந்துள்ளது.ஒரு சில நாட்களில், தொற்று முடிவுக்கு வரும்.நடவடிக்கைதடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டுள்ளது.

விரைவில், தடுப்பூசி முழுமையாக போடப்பட்ட மாநிலமாக தமிழகம் மாறும். கொரோனா வந்த பின்ஏற்பட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க, தனி வார்டுகள் துவக்கப்பட்டுள்ளன. கறுப்பு பூஞ்சையால் 2,510 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 130 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்; போதிய மருந்துகள் உள்ளன.மூன்றாவது அலை வரக்கூடாது; வந்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X