அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி பிறந்த நாள் செம்மொழி தினமாகுமா?

Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : ''கருணாநிதி பிறந்த நாளை, 'செம்மொழி தமிழ் தினமாக' அறிவிக்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் வலியுறுத்தினார். சட்டசபையில் அவர் பேசியதாவது:கவர்னர் உரை மிக அழகான உரை. வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அலுவல் மொழியாக, தமிழையும் அங்கீகரிக்க, மத்திய அரசை

சென்னை : ''கருணாநிதி பிறந்த நாளை, 'செம்மொழி தமிழ் தினமாக' அறிவிக்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் வலியுறுத்தினார்.

சட்டசபையில் அவர் பேசியதாவது:கவர்னர் உரை மிக அழகான உரை. வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பில் முன்னுரிமை, இந்திய அலுவல் மொழியாக, தமிழையும் அங்கீகரிக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம் என, தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை, சட்டசபையில் திறக்க வேண்டும். அவரது பிறந்த நாளான ஜூன் 3ம் தேதியை, 'செம்மொழி தமிழ் தினமாக' அறிவிக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்.

உத்திரமேரூர், வாலாஜாபாத் புறவழிச்சாலை பணிகளை நிறைவேற்ற வேணடும். உத்திரமேரூர் ஏரியை துார் வாரி ஆழப்படுத்த வேண்டும்.காஞ்சிபுரம் பஸ் நிலையத்தை, சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலைக்கு மாற்ற வேண்டும். வாலாஜாபாத்தில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
23-ஜூன்-202122:29:50 IST Report Abuse
m.viswanathan நாட்டிற்கு மிகவும் தேவை ? நீங்க திருந்தவே மாட்டிங்க
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
23-ஜூன்-202120:18:47 IST Report Abuse
RajanRajan இங்கிலீஸ் செம்மொழின்னு போர்டு மாட்டி அழகு பார்த்துடுவானுங்களோ என்னவோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X