மாணவியிடம் ஆபாச பேச்சு அரசு பள்ளி ஆசிரியர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியிடம் ஆபாச பேச்சு அரசு பள்ளி ஆசிரியர் கைது

Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (8)
Share
ராமநாதபுரம் : --மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில் அரசு பள்ளிவாசல் இருபாலர் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு, ஏராளமான மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராக, முதுகுளத்துாரைச் சேர்ந்த ஹபீப் முகம்மது, 36 பணியாற்றுகிறார்.
 மாணவியிடம் ஆபாச பேச்சு அரசு பள்ளி ஆசிரியர் கைது

ராமநாதபுரம் : --மாணவியிடம் ஆபாசமாக பேசிய அரசு பள்ளி ஆசிரியர் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில் அரசு பள்ளிவாசல் இருபாலர் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு, ஏராளமான மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் அறிவியல் பாட ஆசிரியராக, முதுகுளத்துாரைச் சேர்ந்த ஹபீப் முகம்மது, 36 பணியாற்றுகிறார். இவர், மாணவி ஒருவரிடம் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், புத்தகத்தை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வர வேண்டும். பல மாணவியரின் பெயரைக் கூறி அவர்கள் எல்லாம் வந்துள்ளதாகவும், அவர்களுக்கு அதிக மதிப்பெண் போட்டு தேர்ச்சி பெற வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசை இருந்தால் அதை மனதிலேயே வைத்து கொள்ளக் கூடாது. உடனே தீர்த்துக் கொள்ள வேண்டும்' என ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்த புகாரின்படி, ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அரசு ஊழியர்திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ராஜா, 32; இவர், 2016ல் ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.அப்போது, அதே பள்ளியில் படித்து வந்த, எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவிக்கும், அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு தனிமையில் சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், 'குரூப் 4' தேர்வில் தேர்ச்சி பெற்று, திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், இளநிலை உதவியாளராக ராஜா பணியில் சேர்ந்தார். அதன்பின்னும், ஆரணி மாணவியுடன் நட்பை தொடர்ந்து உள்ளார்.இது குறித்து, 16ம் தேதி மாணவியின் குடும்பத்தினர் திருவண்ணாமலை எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆரணி மகளிர் போலீசார் ராஜா மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X