அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிதி நிலை பற்றாக்குறை சட்ட மசோதா தாக்கல்

Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : நிதி பற்றாக்குறையை, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 3 சதவீதம் வரை குறைப்பதற்கான காலவரம்பை நீட்டிப்பதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசின் 15வது நிதிக்குழு, தன் 2021 - 26ம் ஆண்டுக்கான அறிக்கையில், 2021 - 22 முதல், 2024 - 25ம் ஆண்டு வரையிலான, முதல் நான்கு ஆண்டுகளில், ஆண்டொன்றுக்கு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில், 0.05 சதவீதம்

சென்னை : நிதி பற்றாக்குறையை, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 3 சதவீதம் வரை குறைப்பதற்கான காலவரம்பை நீட்டிப்பதற்கான சட்ட மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் 15வது நிதிக்குழு, தன் 2021 - 26ம் ஆண்டுக்கான அறிக்கையில், 2021 - 22 முதல், 2024 - 25ம் ஆண்டு வரையிலான, முதல் நான்கு ஆண்டுகளில், ஆண்டொன்றுக்கு மாநில மொத்த உற்பத்தி மதிப்பீட்டில், 0.05 சதவீதம் அளவுக்கு கூடுதல் கடன் பெறுவதற்கான வழிவகைகளை பரிந்துரைத்துள்ளது.நிதிக்குழுவானது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டிற்கு, நிகர கடன் பெறுதலுக்கான வரம்பினை, 2021 - 22ம் ஆண்டு 4 சதவீதம்; 2022 - 23க்கு 3.5 சதவீதம்; 2023 - 24 முதல் 2025 - 26 வரை 3 சதவீதம் என, பரிந்துரைத்துள்ளது.நிதிக்குழு பரிந்துரைகள் அடிப்படையில், வருவாய் பற்றாக்குறையை நீக்கவும், நிதி நிலை பற்றாக்குறையை, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் 3 சதவீதம் வரை குறைப்பதற்கான காலவரம்பை, 2024 மார்ச் 31 வரை நீட்டிக்க, அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, 2003ம் ஆண்டு தமிழ்நாடு நிதிநிலை நிர்வாகத்தின் பொறுப்புடைமை சட்டத்தை திருத்தம் செய்ய, சட்டசபையில் நிதி அமைச்சர் தியாகராஜன், மசோதா தாக்கல் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
23-ஜூன்-202120:39:22 IST Report Abuse
RajanRajan கடன் வாங்கி கலியாணம் நடத்துறானுங்களோ. சரிசரி நடக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X