அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம்: ஸ்டாலின் உறுதி

Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை : ''வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி, பட்ஜெட் கூட்டத்தொடரில், தீர்மானம் நிறைவேற்றப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். கவர்னர் உரைக்கு நன்றிசட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழரசி பேசுகையில், ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற,
 வேளாண் சட்டங்களை திரும்ப பெற  வலியுறுத்தி தீர்மானம்: ஸ்டாலின் உறுதி

சென்னை : ''வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என, மத்திய அரசை வலியுறுத்தி, பட்ஜெட் கூட்டத்தொடரில், தீர்மானம் நிறைவேற்றப்படும்,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கவர்னர் உரைக்கு நன்றிசட்டசபையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழரசி பேசுகையில், ''மத்திய அரசு கொண்டு வந்துள்ள, மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். அதற்கு பதில் அளித்து, முதல்வர் பேசியதாவது:வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப் பட்ட நாள் முதல், உழவர் நலனுக்கு எதிரான இந்தச் சட்டங்களை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, தி.மு.க., பல்வேறு தருணங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இதை அனைவரும் அறிவர். அந்த வகையில், தமிழகம் மட்டுமல்ல; இந்தியா முழுதும் உள்ள விவசாயிகளின் உணர்வுகளையும், விருப்பத்தையும், இந்த மன்றம் முழுமையாக பிரதிபலிக்கும். மூன்று வேளாண் சட்டங்களையும், மத்தியஅரசு திரும்ப பெற வலியுறுத்தி, இந்த சபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்ற, அரசு தெளிவாக முடிவு செய்துள்ளது. அதில் எந்த மாற்றமும் கிடையாது.சிறுபான்மையினர் அச்சம்தற்போது, சபையின் முதல் கூட்டத் தொடர் என்ற முறையில், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, இத்தகைய தீர்மானங்களை முன்மொழிந்து நிறைவேற்றுவது, உகந்ததாக இருக்காது.

எனவே, வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டமும், நாடு முழுதும் இருக்கக் கூடியசிறுபான்மையினரின் நலனை வெகுவாக பாதித்து, அவர்களிடத்தில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தையும், மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானமும், வர உள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, நிச்சயமாக நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
23-ஜூன்-202110:25:49 IST Report Abuse
R. Vidya Sagar அப்போ உழவர் சந்தைகளையும் மூடி விட வேண்டியதுதானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X