அரசியல் செய்தி

தமிழ்நாடு

குழுக்கள் மேல் குழுக்கள் கிருஷ்ணசாமி கண்டனம்

Added : ஜூன் 22, 2021
Share
Advertisement
மதுரை : 'குழுக்கள் மேல் குழுக்களை போட்டு மக்களை குழப்ப வேண்டாம்' என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: முதல்வர், அமைச்சர்கள், இந்திய பேரரசை முறையாக அடையாளப் படுத்தாமல் ஒன்றிய அரசு என தொடர்ந்து இழிவுபடுத்துவது தேச பக்தர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒன்றிய அரசு என்ற சொல், கவர்னர் உரையின் தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது.

மதுரை : 'குழுக்கள் மேல் குழுக்களை போட்டு மக்களை குழப்ப வேண்டாம்' என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: முதல்வர், அமைச்சர்கள், இந்திய பேரரசை முறையாக அடையாளப் படுத்தாமல் ஒன்றிய அரசு என தொடர்ந்து இழிவுபடுத்துவது தேச பக்தர்களிடம் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.ஒன்றிய அரசு என்ற சொல், கவர்னர் உரையின் தமிழாக்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சட்டசபை பதிவேடுகளிலும் இனி இடம்பெற்று விடும். இது கவர்னர் கவனத்திற்கு வரவில்லையா என தெரியவில்லை.எதற்கெடுத்தாலும் இந்த அரசு, குழுக்கள் நியமிப்பதை கொள்கையாக கொண்டுள்ளது. ஆட்சிக்கு வந்த 45 நாட்களில் 'நீட்' தேர்வு குறித்து குழு, மாநில நிதி ஆதாரம் குறித்து ஆராய குழு, கறுப்பு பூஞ்சை கண்டறிய குழு, கொரோனா குறித்து ஆராய குழு என, பல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்த குழுக்கள் போதவில்லை என, தற்போது முதல்வருக்கான பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்படும் என கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநில அரசு, செலவை குறைப்பதற்கு பதிலாக கூட்டிக் கொண்டே செல்வது எவ்விதத்தில் நியாயம்?இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X