அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணில்கள் மூலம் மின்தடை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

Updated : ஜூன் 22, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சின்ன சின்ன மின்வெட்டு நடப்பதற்கு என்ன காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு இருந்தார். இதில் அணில்கள் குறித்து செந்தில்பாலாஜி குறிப்பிட்ட விஷயம் வைரலாகி வருகின்றது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில ஊர்களில் அவ்வப்போது 5 நிமிடம், 10 நிமிடம் என்று மின்சார தடை

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அடிக்கடி சின்ன சின்ன மின்வெட்டு நடப்பதற்கு என்ன காரணம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பல்வேறு விஷயங்களை பட்டியலிட்டு இருந்தார். இதில் அணில்கள் குறித்து செந்தில்பாலாஜி குறிப்பிட்ட விஷயம் வைரலாகி வருகின்றது.



latest tamil news




தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில ஊர்களில் அவ்வப்போது 5 நிமிடம், 10 நிமிடம் என்று மின்சார தடை ஏற்படுகிறது. சில மாவட்டங்களில் மின் தடை பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இன்னொரு சில மாவட்டங்களில் இந்த பிரச்சனை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஏற்படும் இந்த சிறிய அளவிலான மின்தடைக்கு என்ன காரணம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.


விளக்கம்


அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், மின்வெட்டு பிரச்சனையை செய்து வருகிறோம். கடந்த டிசம்பருக்கு பின் முந்தைய அரசு பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. மரங்கள், செடிகளை அகற்றவில்லை. தேர்தலை மனதில் வைத்து பராமரிப்பு பணிகளை செய்யவில்லை. இதனால் பல இடங்களில் மின் கம்பிகள் இருக்கும் இடங்களில் மரங்கள் வளர்ந்து உள்ளன. கிளைகள் இந்த கம்பிகளுக்கு இடையே செல்வதால் அவ்வப்போது கம்பிகள் உரசி மின்தடை ஏற்படுகிறது. அதேபோல் அணில்கள் இந்த கிளைகளில் இருந்து மின்கம்பிகளுக்கு செல்வதால், இரண்டு மின் கம்பிகள் உரசி மின்சார தடை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.


latest tamil news





ராமதாஸ் டுவிட்டரில் விமர்சனம்



சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MANI DELHI - Delhi,இந்தியா
28-ஜூன்-202110:22:29 IST Report Abuse
MANI DELHI பகுத்தறிவு அறிவுகளின் மனித திறன்கள் சலவை செய்துவிடப்பட்டதால் ஐந்தறிவு ஜீவன்களை வைத்து நாங்கள் அரசியல் செய்வோம். காசுக்கு கட்சிமாறி அடிமையானதால் எங்கள் மூளையை சேர்த்து அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துள்ளோம். என்னை நம்பி ஒட்டு போட்ட மக்களுக்கு நான் பொறுப்புஇல்லை..
Rate this:
Cancel
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம் - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஜூன்-202108:00:57 IST Report Abuse
Yaro Oruvan Vs திருடர் முன்னேற்ற கழகம்  நாலு எறும்புகள் ஒரே நேரத்தில் மின் கம்பி மேலே சென்றதால் ஏற்பட்ட அதிர்ச்சி காரணமாக வரும் 59 மாதங்கள் மின் தடை ஏற்படும்.. இதை கண்காணித்து அறிக்கை கொடுக்க நிபுணர் குழு அமைச்சர் திரு பாலாஜி தலைமையிலும் டபுள் வாட்ச் டக்ளஸ் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது.. இந்த குழு தனது அறிக்கையை விரைந்து விசாரித்து ஐந்தாண்டுகளுக்குள் அளிக்கும்.. அறிக்கை வந்த உடன் உடனடியாக போர்கால அடிப்படையில் கழக அரசு டின்டர் டன்டர் சாரி டெண்டர் விட்டு கஜானாவை காலி செய்யும்..இது கவர்னர் உரையின் ஒரு பகுதிங்கோ ..
Rate this:
Cancel
R KUMAR - Oregon,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202119:52:22 IST Report Abuse
R KUMAR தயவு செய்து இது போன்ற உண்மைகளை சட்ட சபையில் வெளியிட வேண்டாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X