கொரோனா பரவலை அ.தி.மு.க., அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது: இ.பி.எஸ்.,

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை :''அ.தி.மு.க., ஆட்சியில், கொரோனா தொற்று பரவல், சிறப்பாக கட்டுப்படுத்தப் பட்டது,'' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:இ.பி.எஸ்., எதிர்க்கட்சி தலைவர்: அ.தி.மு.க., ஆட்சியில் பிப்., 26 நிலவரப்படி, ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 481 பேர் என்று தான் இருந்தது.சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகளை சந்தித்து
கொரோனா அ.தி.மு.க.,  சிறப்பு, இ.பி.எஸ்.,

சென்னை :''அ.தி.மு.க., ஆட்சியில், கொரோனா தொற்று பரவல், சிறப்பாக கட்டுப்படுத்தப் பட்டது,'' என, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

இ.பி.எஸ்., எதிர்க்கட்சி தலைவர்: அ.தி.மு.க., ஆட்சியில் பிப்., 26 நிலவரப்படி, ஒரு நாள் கொரோனா தொற்று பாதிப்பு 481 பேர் என்று தான் இருந்தது.சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தொற்று பரவலை கட்டுப்படுத்த அதிகாரிகளை சந்தித்து பேச முடியாத நிலை ஏற்பட்டது.தலைமை செயலரை அழைத்து தொற்றை தடுக்க, மாவட்ட கலெக்டர்கள், மருத்துவ நிபுணர்கள் குழு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய கோரினோம்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், கூட்டத்தை நடத்த முடியாது என்றார் அவர். இதையடுத்து, தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினோம். தேர்தல் ஆணையத்தில் இருந்து, தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பபட்டது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முதல் மாநிலமாக தமிழகம் இருப்பதாக, மாநில முதல்வர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பாராட்டினார்.தமிழகத்தை பின்பற்றி பரிசோதனைகளை அதிகப்படுத்தி, தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அவர் ஆலோசனை வழங்கினார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு: தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், மே 7 வரை அ.தி.மு.க., அரசு தான் நடந்தது. பிப்., 26க்கு பின், சுகாதார அமைச்சர் என்ற முறையில் இரண்டு முறை விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.அதை நான், 'டிவி'யில் பார்த்தேன். அப்படி என்றால், அவர் அமைச்சராக பணியாற்றினார் என்று தானே அர்த்தம்.

இ.பி.எஸ்., எதிர்க்கட்சித் தலைவர்: தேர்தல் அறிவித்த பின், அவர் பேட்டி கொடுத்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். மனசாட்சிப்படி நாம் பேசுகிறோம்; உள்நோக்கத்துடன் பேசவில்லை. கொரோனா பரவலை அ.தி.மு.க., அரசு சிறப்பாக கட்டுப்படுத்தியது.

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்: அ.தி.மு.க., ஆட்சியில், தொற்றின் வீச்சு ஒரு மாதிரி இருந்தது; இப்போது ஒரு மாதிரி உள்ளது. நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்று, நாங்கள் சொல்லவில்லை. குறுகிய காலத்தில் நாங்கள் கட்டுப்படுத்தி உள்ளோம். இதில், போட்டி போட தேவையில்லை.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
23-ஜூன்-202120:53:06 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy செத்தவன் குடும்பம் இங்கு இல்லை. கொத்து கொத்தாக செத்ததை மறுக்க முடியாது. செத்தவன் வேறு லோகத்தில் நன்றாக வாழட்டும்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
23-ஜூன்-202119:55:09 IST Report Abuse
vpurushothaman அப்போ அப்படி இருந்தது. இப்போ எத்தனை " அலைகள் " - கூட்டல் கழித்தல் அலையெல்லாம் வந்துடுச்சே ? பாவம் தளபதி என்ன செய்வார். உலகளாவிய பொருளாதார வல்லுநர்களெல்லாம் ஆலோசனை கூறப் போறாங்க. எல்லாரும் பாருங்க.
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
23-ஜூன்-202115:29:55 IST Report Abuse
sahayadhas wt. கொஞ்ச நாளில் அனைவரும் துண்ட காணோம், துணிய காணோனு ஒருவதை காண்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X