அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய கடன் வட்டி ரூ.2,000 கோடி சேமிப்பு

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 22, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை :''மின் வாரிய கடன்களுக்கு 7.50 சதவீத வட்டிக்கு பதிலாக 13 சதவீத வட்டிக்கு, வங்கிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். வங்கிகளிடம் நாங்கள் பேசியதால், வட்டியில் மட்டும் 2,000 கோடி ரூபாயை சேமிக்கும் பணி நடக்கிறது,'' என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்: அ.தி.மு.க., - ரவி: தமிழகம் முழுதும் மின் தடை அதிகரித்துள்ளது. ஒரு நாளுக்கு 20 முறை மின்
மின் வாரிய கடன் வட்டி ரூ.2,000 கோடி சேமிப்பு

சென்னை :''மின் வாரிய கடன்களுக்கு 7.50 சதவீத வட்டிக்கு பதிலாக 13 சதவீத வட்டிக்கு, வங்கிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். வங்கிகளிடம் நாங்கள் பேசியதால், வட்டியில் மட்டும் 2,000 கோடி ரூபாயை சேமிக்கும் பணி நடக்கிறது,'' என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:


அ.தி.மு.க., - ரவி: தமிழகம் முழுதும் மின் தடை அதிகரித்துள்ளது. ஒரு நாளுக்கு 20 முறை மின் தடை ஏற்படுகிறது. ஊரடங்கு காலத்திலும், கட்டாய மின் கட்டண வசூல் நடக்கிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி: மின் கட்டணம் செலுத்த நுகர்வோருக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒன்பது மாதங்களாக மின் வழித்தடங்கள் முறையாக பராமரிக்கப்படாமல், மரக்கிளைகள் சாய்ந்ததும், 'இன்சுலேட்டர்கள், டிரான்ஸ்பார்மர்'கள் பாதித்ததும் மின்தடைக்கு காரணம்.

அ.தி.மு.க., ஆட்சியில் மின்மிகை மாநிலம் என்றனர். அப்படியானால் விண்ணப்பித்து காத்திருக்கும் 2.42 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காதது ஏன்? மத்திய தொகுப்பில் இருந்தும், தனியாரிடம் இருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்து, மின்மிகை மாநிலம் என்றனர். இதனால், மின்வாரியத்தின் கடன் 1.33 லட்சம் கோடி ரூபாயாகவும்; மின் பகிர்மான கழகத்தின் கடன் 25 ஆயிரம் கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதற்கு வட்டியாக மட்டும் ஆண்டுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் கட்டப்பட்டுள்ளது. கடன்களுக்கு 7.50 சதவீத வட்டிக்கு பதிலாக 13 சதவீதம் வட்டிக்கு வங்கிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். வங்கிகளிடம் நாங்கள் பேசியதால், வட்டியில் மட்டும் 2,000 கோடி ரூபாயை சேமிக்கும் பணி தற்போது நடக்கிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.


'பூமிக்கு அடியில் ஓடுதோ அணில்?'



'மின் கம்பியில் படர்ந்துள்ள செடிகளில் அணில் ஓடும் போது, இரண்டு 'லைன்'கள் ஒன்றாகி மின் தடை ஏற்படுகிறது' என, மின் தடைக்கான காரணம் குறித்து, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உட்பட பலரும் கிண்டல் செய்துள்ளனர்.தமிழகத்தில் தற்போது, மின் தடை அதிகரித்து வருகிறது. இது, மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., ஆட்சி இருந்தவரை மின் தடை ஏற்படாத நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், ஏன் மின் தடை ஏற்படுகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக, சமீபத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த பேட்டியில், 'மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள செடி வளர்ந்து, கம்பியோட மோதும் போது, அதில் அணில் ஓடுகிறது. அப்படி, அணில் லைனில் ஓடும்போது, இரண்டு லைன் ஒன்றாகி மின் தடை ஏற்படுகிறது' என,
தெரிவித்துள்ளார். இந்த 'வீடியோ' நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. அதை பார்த்து, பலரும் சமூக வலைதளங்களில், அமைச்சர் செந்தில் பாலாஜியை நக்கல் அடித்து
வருகின்றனர்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:மின் கம்பிகளில் கொடி படர்ந்து, அணில்கள் ஓடுவதால், மின் தடை ஏற்படுகிறது; மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விஞ்ஞானம்... விஞ்ஞானம்.
சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒரு வேளை, சென்னையில், அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில், மக்கள் பதிவிட்டு உள்ள கருத்துகள்:

செந்தில்: சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றது என்றதையே நம்பியவர்கள். இதை நம்ப மாட்டோமோ; அணில் பிடிக்க, 'டெண்டர்' ரெடி.

ஆறுமுகம்: நைட்டு ஒரு மணிக்கு கூட, எங்க ஏரியாவில், 'நைட் டியூட்டி' பார்க்கும் அணில் அண்ணன்.

முரட்டு சங்கி: மின்சாரத்தில் உபயோகிக்கப்படும், மூன்று, 'பேஸ்' லைனுக்கும், அணில் முதுகில் உள்ள மூன்று கோடுகளுக்கும் உள்ள தொடர்பை ஆராய, வல்லுனர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு, சமூக நீதியை பின்பற்றி, 69 சதவீத இட ஒதுக்கீட்டுடன் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு பலரும் கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
29-ஜூன்-202114:31:18 IST Report Abuse
arabuthamilan வேலை வெட்டி இல்லாத சங்கிகளை அணில் பிடிக்க அனுப்பலாம். ரெடியா சங்கிகளே
Rate this:
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
29-ஜூன்-202114:28:28 IST Report Abuse
arabuthamilan மக்களே செந்தில் பாலாஜி அணில்கள் என்று சொன்னது முன்னாள் மின்துறை அமைச்சர்கள் அவரோடு கொள்ளையடித்த ஆப்பீசர்களையும்தான். இதுக்குதான் தமிழ் இலக்கியங்களை படிக்கணும் . சும்மா மனுஸ்ருதிய படித்தால் செந்தில் பாலாஜி கூற்று அதில் உள்ள வியாக்கியானங்கள் உங்களுக்கு புலப்படாது . .
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
27-ஜூன்-202113:55:58 IST Report Abuse
Hari அன்னே நான் அமெரிக்காவில் இப்படி ஒரு ஆராய்ச்சி செய்து சொல்லி இருந்தால் என்னோட ரேஞ்சே வேறமாதிரி இருந்திருக்கும் ,இங்கு இப்படி நான் சொன்னதை புரிந்துகொள்ளும் அளவிற்கு யாரும் இல்லாத இந்த ஒரு வரப்பட்டிக்காடு மக்கள் வாழும் இந்த தமிழக ஒன்றியத்தில் என்னமாதிரி ஆளுகளுக்கு என்ன மரியாதையை இவர்களிடமிருந்து எதிர்பார்க்க முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X