சீர்திருத்த நடவடிக்கைகளால் மாநில அரசுகளுக்கு பலன்| Dinamalar

'சீர்திருத்த நடவடிக்கைகளால் மாநில அரசுகளுக்கு பலன்'

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி:''மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் 23 மாநிலங்களுக்கு கூடுதலாக 1.06 லட்சம் கோடி ரூபாய் நிதி கிடைத்தது. இதனால், மாநிலங்களுக்கு பலன் கிடைத்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.சீர்திருத்த நடவடிக்கைபிரதமர் மோடி, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ்
 'சீர்திருத்த நடவடிக்கைக, மாநில அரசுகள், பலன்'


புதுடில்லி:''மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் 23 மாநிலங்களுக்கு கூடுதலாக 1.06 லட்சம் கோடி ரூபாய் நிதி கிடைத்தது.
இதனால், மாநிலங்களுக்கு பலன் கிடைத்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் குறிப்பிட்டார்.
சீர்திருத்த நடவடிக்கை
பிரதமர் மோடி, சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பரவலின்போது கடந்தாண்டு பல பொருளாதார சீர்
திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
ஏழை எளிய, நடுத்தர வர்க்க மக்களை பாதிப்பில் இருந்து மீட்பது, தொழில்துறை தடம் புரளா மல் தடுப்பது என, பல சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டன.


latest tamil news



'ஆத்ம நிர்பர்' எனப்படும் தற்சார்பு திட்டத்தின்கீழ் 2020 - 2021 நிதியாண்டில், மத்திய அரசிடமிருந்து கூடுதல் கடன் பெறுவதற்கு மாநில அரசுக்கு வாய்ப்பு தரப்பட்டது.
அதன்படி மொத்தம் 2.14 லட்சம் கோடி ரூபாயில், 23 மாநிலங்கள் 1.06 லட்சம் கோடி ரூபாயை பெற்றுள்ளன. இதனால் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி கிடைத்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதால் இது சாத்தியமானது. இந்த திட்டத்தின்படி மாநிலத்தின் ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 2 சதவீதம் கூடுதலாக கடன் பெற அனுமதிக்கப்பட்டது.
ஊக்கத் தொகை
அதில் 1 சதவீதத்தை குறிப்பிட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் செலவிட வேண்டும் என கூறப்பட்டது. சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
இதுபோன்ற ஊக்கத் தொகையுடன் கூடிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை, கொள்கை, இந்திய பொது நிதியில் மிகவும் அபூர்வம். நாம் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள், மாநிலங்களுக்கு நல்ல பலனை அளித்துள்ளன.
நாம் எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளில் மிக முக்கியமானது, 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம்.
இதன் வாயிலாக ரேஷன் கார்டுகளுடன், குடும்ப உறுப்பினர்களின் ஆதார், மொபைல் போன் எண்கள் இணைக்கப்பட்டன.
நாடு முழுதும் ரேஷன் கடைகளில் மின்னணு முறை அறிமுகமானது. நாட்டின் எந்த பகுதியிலும் பொருள் வாங்கும் வாய்ப்பை இந்த சீர்திருத்தம் ஏற்படுத்தி தந்துள்ளது.
அதேபோல் தொழில் துறை சார்ந்த 'லைசென்ஸ்' புதுப்பித்தல் நடைமுறை 'ஆன்லைன்' முறைக்கு மாறியது. சொத்து வரி நிர்ணயிப்பதில் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X