காங்., மேலிட குழுவை சந்தித்தார் அமரீந்தர் சிங்| Dinamalar

காங்., மேலிட குழுவை சந்தித்தார் அமரீந்தர் சிங்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி :பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், டில்லியில் காங்., மேலிட குழுவை சந்தித்து, உட்கட்சி பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.பஞ்சாபில் ஆளும் காங்., கட்சியை சேர்ந்த முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரையும் சமரசம் செய்ய, காங்., மேலிட குழு அமைக்கப்பட்டுள்ளது.ராஜ்யசபா எதிர்க்கட்சி
 காங்., மேலிட குழுவை சந்தித்தார் அமரீந்தர் சிங்

புதுடில்லி :பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், டில்லியில் காங்., மேலிட குழுவை சந்தித்து, உட்கட்சி பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.

பஞ்சாபில் ஆளும் காங்., கட்சியை சேர்ந்த முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரையும் சமரசம் செய்ய, காங்., மேலிட குழு அமைக்கப்பட்டுள்ளது.ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலர் ஹரிஷ் ராவத், முன்னாள் எம்.பி., அகர்வால் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழு அதன் அறிக்கையை காங்., தலைவர் சோனியாவுக்கு அனுப்பியது.அதில், 'அமரீந்தர் சிங், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்தித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்' என,தெரிவிக்கப்பட்டிருந்தது.



latest tamil news


இந்நிலையில் டில்லியில் நேற்று அமரீந்தர் சிங், மேலிட குழுவை மீண்டும் சந்தித்தார்.அதிருப்தியாளர்களை சமாளித்து, பஞ்சாப் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X