ரூ. 2 கோடி இழப்பீடு வழங்க தேவகவுடாவுக்கு உத்தரவு

Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
பெங்களூரு : சாலை அமைக்கும் திட்டத்தில் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாக, தனியார் நிறுவனத்தின் மீது புகார் கூறியது தொடர்பான வழக்கில் 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.கர்நாடகா மாநிலம் பீதரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் கேனிக்கு சொந்தமான நைஸ் நிறுவனம் சார்பில் மைசூரு சாலையை
Deve Gowda, Infra Firm, BOOT project, loot project

பெங்களூரு : சாலை அமைக்கும் திட்டத்தில் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாக, தனியார் நிறுவனத்தின் மீது புகார் கூறியது தொடர்பான வழக்கில் 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு, பெங்களூரு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கர்நாடகா மாநிலம் பீதரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் கேனிக்கு சொந்தமான நைஸ் நிறுவனம் சார்பில் மைசூரு சாலையை இணைக்கும் வகையில் தனியார் சுங்க கட்டண சாலை அமைக்கப்பட்டு உள்ளது.சாலை அமைப்பதற்கு, நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது.இதை கண்டித்து, ம.ஜ.த.,வை சேர்ந்தவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இணைந்து பல போராட்டங்கள் நடத்தினார்.


latest tamil news



2011 ஜூன் 20ல் தனியார் 'டிவி' சேனலுக்கு பேட்டி அளித்த போது, 'நைஸ் நிறுவனம் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது' என, குறிப்பிட்டார். இது குறித்து, நைஸ் நிறுவனம் சார்பில் பெங்களூரு 12வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது.

சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி மல்லனகவுடா தீர்ப்பில் கூறியுள்ளதாவது: தேவகவுடா, தன் குற்றச்சாட்டை நிரூபிப்பதில் தோல்வியடைந்துள்ளார். எனவே நைஸ் நிறுவனத்துக்கு மான நஷ்டமாக 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தீர்ப்பளித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
23-ஜூன்-202117:34:21 IST Report Abuse
சீனி சொத்தெல்லாம், பசங்க, பேரங்க பேருல எழுதியாச்சு. கவுடா, திவால் நோட்டிஸ் கொடுத்துவிட்டு, வடிவேல் ரேஞ்சுல பாக்கெட்டை வெளியெ எடுத்து விட்டுவிடுவார்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
23-ஜூன்-202113:37:40 IST Report Abuse
M  Ramachandran தே வினாகௌடா ( பார்லிமென்ட்டில் தூங்கி காமெடி பண்ணியவர் அது மட்டுமல்ல தேரூவில் வேட்டி தூக்கி செவிற்றில் அசிங்கம் பண்ணி ஊடகங்களில் பெயர் எடுத்தவர்.) இந்த இரண்டு கோடி எல்லாம் ஜூஜூ பி. அதை இசியாக வசூலித்து விடுவார்.அவரை பிரதமராக தேர்ந்தேடுத்த மஞ்சத்துண்டு ( அப்துல் கலாமை மட்டும் பிடிக்காது) எல்லாம் ஒரே ரகம்.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
23-ஜூன்-202113:03:22 IST Report Abuse
Sridhar இதுபோல ராவுல் கண்டி மீது பல வழக்குகள் போடலாமே? அவன் கூறும் ஒரு குற்றச்சாட்டையும் அவனால் நிரூபிக்கமுடியாதே? ஏன் அணில் அம்பானி கூட போடவில்லை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X