அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அய்யோ பாவம் ஸ்டாலின்!

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (104)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்த 40 நாட்களிலேயே, அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது போங்க! 'நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என கையை விரித்து விட்டார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
CM Stalin, DMK, Stalin, MK Stalin


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க., ஆட்சிக்கு வந்த 40 நாட்களிலேயே, அதன் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிட்டது போங்க! 'நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதை உறுதியாக சொல்ல முடியாது' என கையை விரித்து விட்டார், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்.

'பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் சாத்தியமே இல்லை' என, 'குண்டை' துாக்கி போட்டார், நிதி அமைச்சர் தியாகராஜன். தமிழக அரசு, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அதை சரிசெய்ய நிபுணர் குழு எல்லாம் அமைக்கிறது, மாநில அரசு.பிரதமர் மோடியை சந்தித்து 25 கோரிக்கைகளை முன்வைத்தார், முதல்வர் ஸ்டாலின். அவை நிறைவேற்றப்படுமா என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும், பிரதமர் மோடி தரவில்லை.


latest tamil news



தி.மு.க.,வினர், 'கோ பேக் மோடி' என பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததை, அவ்வளவு சீக்கிரம் பிரதமர் மோடி மறந்திருக்க மாட்டார். போதாக்குறைக்கு, நிதி அமைச்சர் தியாகராஜன் வேறு, தன் பங்குக்கு அவ்வப்போது மத்திய அரசை விமர்சித்து கடுப்பேத்துகிறார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை தேர்வு செய்வதில் சிறப்பாக செயல்பட்ட முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் நியமனத்தில், 'கோட்டை' விட்டுவிட்டார் என, நினைக்க தோன்றுகிறது.

கோவில் நிலங்களை மீட்பதில் அக்கறை காட்டி பாராட்டு பெற்ற ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, 'கோவிலில், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம்' எனக் கூறி, மக்களிடம் அதிருப்தியை சம்பாதித்தார். 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த பாவிகள் ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்' என, தி.மு.க., கூட்டணி கட்சி தலைவர்களான வைகோவும், திருமாவளவனும் வேறு, முதல்வர் ஸ்டாலினுக்கு குடைச்சல் தருகின்றனர்.

ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது கிடைத்த நிம்மதியும், மகிழ்ச்சியும், ஆட்சிக்கு வந்த நாள் முதல் இல்லாமல் போய்விட்டது; பாவம்!

Advertisement




வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Thanjavur,இந்தியா
24-ஜூன்-202101:40:35 IST Report Abuse
Ram If you are upset with current Govenment , Are you ready to Accept Chinnama ? Think..
Rate this:
Cancel
Ram - Thanjavur,இந்தியா
24-ஜூன்-202101:36:50 IST Report Abuse
Ram I hope we are feeling better than ADMK... you should understand People had voted and elected. Not like ADMK .. EDAPPADI , PAnnir Just came to cM seat... So People are never Wrong in voting.. There can be critics, But they might take measures. See the ADMK ministers corrpution list. Since Covid is not in our Hand . it is nature, People has to cooperate... Government cannot do anyting. People are generally happy Mettur Dam has been ed for Agriculture. Atleast DMK listens to people input and trying to correct I think in long run they might do well since a month is over. So we all should b matured enought to cooperate with Government and See.. See the Sex scandal issue in schools.. The police department is doing lot to work on this. We have to wait and see. They have to over come all the hurdles. They are not magicians. So be positive. This is the first time people are confident on the Government and coming forward to give Donations for COVID relief. So thing will improve. Also There is no native Party to run the Tamil Nadu Government,, We are atleast in Safe hand to start with . I am not from a political party. Just a common Man....
Rate this:
Cancel
23-ஜூன்-202123:19:22 IST Report Abuse
முரளி நாளைக்கு அந்த பெட்ரோல் விலை இன்னும் 25 பைசா ஏத்துவான் அப்புறமா பேசுங்க. அத பத்தி எவனும் பேச மாட்டீங்க
Rate this:
madhavan rajan - trichy,இந்தியா
26-ஜூன்-202122:38:32 IST Report Abuse
madhavan rajanஆக இருபத்தைந்து பைசாவைப் பற்றியே பேசி இருநூறு ரூபாய் விலை ஏறிய கட்டுமானப் பொருட்களுக்கு வாழ்த்து தெரிவியுங்கள் முரளி அவர்களே. பெட்ரோல் விலை ஏற்றத்திற்கும் அரசுக்கும் சம்பந்தமே கிடையாது. பெட்ரோல் தயாரிக்கும் நிறுவனங்கள் விலை மாற்றத்தை செய்துகொள்வதற்கு காங்கிரஸ் திமுக காலத்திலேயே அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X