உட்கட்சிப் பூசலின்போது பா.ஜ., அமைதி காத்தது: சிராக் பாஸ்வான்| Dinamalar

உட்கட்சிப் பூசலின்போது பா.ஜ., அமைதி காத்தது: சிராக் பாஸ்வான்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (16)
Share
புதுடில்லி: லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தினார். மறைந்த தனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் குறித்து உரையாற்றிய அவர், பாஜக குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டபோது பாஜ., அமைதி காத்தது தன்னை காயப்படுத்தியது என்று அவர் தெரிவித்துள்ளார்.2000ஆம் ஆண்டு துவங்கப்பட்ட
Chirag Paswan, BJP, Silence Hurts, Lok Janshakti Party

புதுடில்லி: லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் தனது அரசியல் பலத்தை நிரூபிக்க மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தினார். மறைந்த தனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் குறித்து உரையாற்றிய அவர், பாஜக குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டபோது பாஜ., அமைதி காத்தது தன்னை காயப்படுத்தியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டு துவங்கப்பட்ட லோக் ஜனசக்தி கட்சி பாஜக உடன் நீண்ட காலமாக கூட்டணியில் உள்ளது. மோடி மீது தான் மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருப்பதாகக் கூறிய சிராக் பாஸ்வான், தான் கஷ்டப்பட்ட காலத்தில் பாஜக தனக்கு கை கொடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

லோக் ஜனசக்தி கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டபோது பாஜ., மௌனம் காத்தது சரியல்ல என்று கூறிய அவர், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது கட்சியினர் தங்கள் கட்சிக்குள் பிரச்னையை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.


latest tamil news



தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக முன்னேற கூடாது என்ற நோக்கத்தில் நிதிஷ்குமார் செயல்பட்டதாகவும் தனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வானுக்கும் இதேபோல சிக்கல் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். சிராக் பாஸ்வானின் மாமா பசுபதி குமார் லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த 5 லோக்சபா உறுப்பினர்களை தனக்கு எதிராக திருப்ப முயற்சி மேற்கொண்டதாக சிராக் கூறினார்.

பாஜகவுடன் தங்கள் கூட்டணி தொடருமா, இல்லையா என்பதை பாஜகவினர்தான் முடிவு செய்யவேண்டும் என்று தெரிவித்த அவர், பாஜகவுக்கு தான் ஆதரவு தெரிவிப்பதை இன்றைய கூட்டத்தில் தான் நிரூபித்துவிட்டதாக திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜ., மத்தியில் ஆட்சி ஏற்றதுதுவங்கி கடந்த ஆண்டு அவரது மறைவுவரை ராம்விலாஸ் பாஸ்வான் பாஜகவின் நாடாளுமன்ற அமைச்சர்களில் ஒருவராக பதவி வகித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு அடுத்து தன்னை அவர்களது கூட்டணிக்கு அழைத்து உள்ளதாகவும் அதற்கு தான் சம்மதிக்க வில்லை என்றும் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X