பொது செய்தி

இந்தியா

பாக்.,கின் எல்லை பயங்கரவாதம் வேரோடு களையப்படும்: ஜெய்சங்கர்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: ஆப்கானிஸ்தான் குறித்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். பயங்கரவாதம் குறித்து இந்த விவாதத்தில் பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்துரையாடினர்.சர்வதேச அளவில் அச்சுறுத்தல் ஏற்படும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த
UNSC debate, Pakistan, Jaishankar

புதுடில்லி: ஆப்கானிஸ்தான் குறித்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் விவாதத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு உரையாற்றினார். பயங்கரவாதம் குறித்து இந்த விவாதத்தில் பல நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

சர்வதேச அளவில் அச்சுறுத்தல் ஏற்படும் பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தின்போது பாகிஸ்தானில் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பாகிஸ்தானை ஜெய்சங்கர் விமர்சித்துள்ளார்.

இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்தை சகித்துக் கொண்டிருக்காது என்று அவர் கூறியுள்ளார். அவர் பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார் என இதன்மூலம் தெளிவாகிறது. கடந்த பல ஆண்டு காலமாக அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி வருகின்றனர். பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டுத் தாக்குதல் உள்ளிட்ட வன்முறை செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அவ்வபோது அச்சுறுத்தல் ஏற்படுகிறது.


latest tamil news



இந்தியாவுடன் மறைமுகமாக மோதிவரும் பாகிஸ்தான் மறுபுறம் ஆப்கானிஸ்தானுடன் மோதிவருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் தாலிபான் அமைப்பு அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்மீது நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து செயல்பட்டுவரும் எந்தவித பயங்கரவாத அமைப்பும் ஆயுத சப்ளை மற்றும் நிதி உதவி செய்ய தடை விதிக்கப்படும். இதற்கு இந்தியா தீவிர முயற்சி மேற்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளின் சொர்கபுரியாகத் திகழும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கு அமைதி நிலை நாட்டப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய எல்லைப் பகுதியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு ஜெய்சங்கர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜூன்-202123:18:18 IST Report Abuse
ஆப்பு இதெல்லாம் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் மாதிரி. தீவிர வாதத்தை ஒழிச்சுட்டா வேற எதை வெச்சு ஓட்டு வாங்குறது? அடுத்த தேர்தலுக்கு இன்னொரு புல்வாமா வரவேணாமா? தீவிரவாதிகளுக்கும் பொழைக்க வேற வழியில்லை. மூர்க்கம் எப்பவும் அடுத்தவனை அடிச்சு சாப்பிடத்தான் சொல்கிறது. அவிங்களால சுயமா உழைச்சு முன்னுக்கு வர முடியாது.
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
23-ஜூன்-202111:54:01 IST Report Abuse
Gandhi 70 வருட போலி மதசார்பின்மை இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது . பெருவாரியாக இஸ்லாமியர் இருப்பதால் இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் , பங்களாதேஷ் தங்களை இஸ்லாமிய நாடு என்று, அறிவித்துக்கொள்ளும் போது ஹிந்துக்கள் பெருவாரியாக இருக்கும் இந்தியா ஏன் ? தங்களை ஹிந்துநாடு என்று அறிவிக்க கூடாது ? ஹிந்துஸ்தான் என்று அறிவித்தால் அனைத்து உள்நாட்டு , வெளிநாட்டு தீவிரவாதிகள் பிரச்சனைகள் உடனே முற்றுப்பெறும்.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
23-ஜூன்-202109:31:55 IST Report Abuse
பாமரன் அட இந்தியா வல்லரசாகும், வறுமை ஒழிக்கப்படும், கருப்பு பணத்தை ஒளிப்போம்... ஸாரி ஒழிப்போம், ஊழல் ஒழிக்கப்படும்.... இந்த மாதிரி ப்ராமிஸ்ல பாக் பயங்கரவாதத்தை சேர்த்தது கூட தெரியாமல் பேசியிருக்காப்ல... ஆனால் நாம வழக்கமா பழியைப் போடும் நமது அண்டை நாடுகள் எல்லாம் நம்மை தாண்டி ரொம்ப வேகமா முன்னேறிக்கிட்டு இருக்கு... இவனுவ இன்னும் கொரோணா கூட வடை சுட்டு பேணர் வச்சிக்கிட்டு இருக்கானுவ...😡😡 என்னத்த சொல்ல..
Rate this:
blocked user - blocked,மயோட்
23-ஜூன்-202114:22:09 IST Report Abuse
blocked user"கருப்பு பணத்தை ஒளிப்போம்" - இந்த நக்கல் வேண்டாமே......
Rate this:
blocked user - blocked,மயோட்
23-ஜூன்-202114:24:15 IST Report Abuse
blocked userதெர்மோக்கோல் 2.0 அங்க அணிலால் மின்சார வடை செய்வது தடை என்று ஒருவன் கதை விடுகிறான்... திமுக ந்னவுடன் நீர் அப்படியே பம்மி விட்டீர்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X