அமெரிக்க ராணுவ தளம்: இம்ரான் கான் எதிர்ப்பு

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
இஸ்லாமாபாத் : ''ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானில் அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் '' என பாக். பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் பாக். பிரதமர் இம்ரான்கான் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கனில் பின்லேடனை தேடும் பணிக்காக பாகிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கு
Imran Khan,Pakistan,America, US, இம்ரான்

இஸ்லாமாபாத் : ''ஆப்கனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக பாகிஸ்தானில் அமெரிக்கா ராணுவ தளம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் '' என பாக். பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் பாக். பிரதமர் இம்ரான்கான் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஆப்கனில் பின்லேடனை தேடும் பணிக்காக பாகிஸ்தானில் அமெரிக்க படைகளுக்கு இடம் அளிக்கப்பட்டது. இதனால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர் உயிரிழக்க நேர்ந்தது. அமெரிக்கா எங்களுக்கு உதவியது.


latest tamil news



ஆனால் அதைவிட அதிகமாக பாக்., பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. தலிபான்களுக்கு எதிரிகளாக ஆனோம். மேலும் பாகிஸ்தானில் தெஹ்ரிக் - இ - தலிபான் உள்ளிட்ட இதர குழுவினரும் பாக். கிற்கு எதிராக பயங்கரவாதச் செயல்களை கட்டவிழ்த்து விட்டனர். அமெரிக்காவிற்கு ஏற்கனவே இடம் அளித்து பெரிய தவறு செய்து விட்டோம். இனி ஒருமுறை அந்த தவறை செய்ய மாட்டோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
23-ஜூன்-202114:56:12 IST Report Abuse
Nagarajan D அமெரிக்கா உன் நாட்டை விட்டு ஓடி விடும் ஏனெனில் உங்க நாட்டில் கனிம வளமோ இல்லை பெட்ரோலிய வளமோ இல்லை... சும்மா ஒரு தற்காலிக தங்குமிடமாகவே அமெரிக்கா உங்களை நினைக்கும் ஆனால் சீன அப்படி அல்ல... அவனுங்க உங்க நாட்டை கபளீகரம் செய்யவே உங்களுக்கு உதவுவது போல் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்... நீ ஒரு கேன தனமான தலைவன் என நிரூபித்து விட்டாய்
Rate this:
Cancel
sangu - coimbatore,இந்தியா
23-ஜூன்-202111:24:55 IST Report Abuse
sangu இதுதான் கர்மாவினை, அன்னை இந்தரா காலத்தில் பாக்கிஸ்தானை வைத்து நம் முன்னேற்றத்தை தடுத்தது, சீக்கிய தீவிரவாதத்தை வளர்த்தது, அதற்காக பெருமளவு பணம் கொடுத்தது, ஆனால் அதை பாக்கிஸ்தான் என்ன செய்தது என தெரியவில்லை. இப்பொது...
Rate this:
Cancel
Ramamurthy Ramani - Chennai,இந்தியா
23-ஜூன்-202110:01:11 IST Report Abuse
Ramamurthy Ramani பின் லேடனை அப்பாட்டப்பதில் தஞ்சம் கொடுத்து அமெரிக்கா படைகளுக்கு ஆப்கானிஸ்தான் பக்கம் போக்கு காட்டி இருவரிடமும் மில்லியன் கணக்காக foreign கரன்சி கிடைத்தது. அதுபோல எதாவது இருந்தால் அமெரிக்கா வரலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X