இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூரில் 30 ஆண்டு சிறை

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்தி கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவின் செல்வம் அவரது மனைவி காயத்ரி வசிக்கின்றனர்.இவர்களின் வீட்டில் மியான்மரைச் சேர்ந்த பியாங் காய்டான் 24 என்ற பெண் வேலைக்கு சேர்ந்தார். அவரை பட்டினி போடுவது
Singapore, 30 years jail, Myanmar maid

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்தி கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவின் செல்வம் அவரது மனைவி காயத்ரி வசிக்கின்றனர்.இவர்களின் வீட்டில் மியான்மரைச் சேர்ந்த பியாங் காய்டான் 24 என்ற பெண் வேலைக்கு சேர்ந்தார். அவரை பட்டினி போடுவது இரும்பு கம்பியால் சூடு வைப்பது துடைப்பம் மற்றும் கட்டைகளால் அடிப்பது என காயத்ரியும் அவரது தாய் பிரேமாவும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதற்கு கெவின் செல்வமும் உடந்தையாக இருந்துள்ளார்.

இவர்களது தொடர் தாக்குதலால் பியாங் காய்டான் எலும்பு முறிவு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு பலியானார். கொலை வழக்கில் கைதான காயத்ரிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


latest tamil news



சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்குகளில் தற்போது விதிக்கப்பட்டுள்ளதே அதிகபட்ச தண்டனை. கெவின் செல்வம் பிரேமா ஆகியோர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஜூன்-202106:17:47 IST Report Abuse
meenakshisundaram திராவிடன் புகழ் திரை கடல் தாண்டி பரவுதே வைரமுத்து ஒரு பாட்டு பாடவேண்டும்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202107:51:25 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN வெளிநாட்டுல டுமீலன்ஸ் மோசமா நடந்து கெட்டபெயர் வாங்குனா "இந்தியர்"ன்னு தான் சொல்லுவோம் டுமீளன் என்று ஒப்புக்கொள்ள கூச்சமா இருக்குல்ல ?
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
23-ஜூன்-202116:53:30 IST Report Abuse
Sidhaarth அது என்ன எப்பவும் திமுக நெனப்பாவே இருக்காங்க. அவங்க வீட்ல விசேஷம்னா கூட திமுக வோடதான் சம்பந்தப்படுத்திக்குவாங்க போல.என்ன செய்ய????ஐந்து வரூட மும் இப்படிதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X