இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூரில் 30 ஆண்டு சிறை| Dinamalar

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு சிங்கப்பூரில் 30 ஆண்டு சிறை

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (36)
Share
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்தி கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவின் செல்வம் அவரது மனைவி காயத்ரி வசிக்கின்றனர்.இவர்களின் வீட்டில் மியான்மரைச் சேர்ந்த பியாங் காய்டான் 24 என்ற பெண் வேலைக்கு சேர்ந்தார். அவரை பட்டினி போடுவது
Singapore, 30 years jail, Myanmar maid

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்தி கொலை செய்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கெவின் செல்வம் அவரது மனைவி காயத்ரி வசிக்கின்றனர்.இவர்களின் வீட்டில் மியான்மரைச் சேர்ந்த பியாங் காய்டான் 24 என்ற பெண் வேலைக்கு சேர்ந்தார். அவரை பட்டினி போடுவது இரும்பு கம்பியால் சூடு வைப்பது துடைப்பம் மற்றும் கட்டைகளால் அடிப்பது என காயத்ரியும் அவரது தாய் பிரேமாவும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளனர். இதற்கு கெவின் செல்வமும் உடந்தையாக இருந்துள்ளார்.

இவர்களது தொடர் தாக்குதலால் பியாங் காய்டான் எலும்பு முறிவு மற்றும் மூளை பாதிப்பு ஏற்பட்டு பலியானார். கொலை வழக்கில் கைதான காயத்ரிக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.


latest tamil news



சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்த பெண்ணை கொடுமைப்படுத்திய வழக்குகளில் தற்போது விதிக்கப்பட்டுள்ளதே அதிகபட்ச தண்டனை. கெவின் செல்வம் பிரேமா ஆகியோர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X