பிலிப்பைன்சில் தடுப்பூசி போடாதவர்களுக்கு சிறை

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மணிலா : 'பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்' என, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில், தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவானவர்களே சென்றுள்ளனர். இதையடுத்து அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே
Philippines president, Rodrigo Duterte, Covid vaccine

மணிலா : 'பிலிப்பைன்சில் கோவிட் தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்' என, அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தடுப்பூசி நிலையங்கள் சிலவற்றில், தடுப்பூசி போட்டுக்கொள்ளக் குறைவானவர்களே சென்றுள்ளனர். இதையடுத்து அந்நாட்டு அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே தெரிவித்துள்ளதாவது:

நாட்டின் மொத்த மக்கள் தொகையான 110 மில்லியனில் இந்த ஆண்டுக்குள் 70 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடுவது அரசாங்கத்தின் இலக்கு. இதுவரை அங்கு 2.1 மில்லியன் பேருக்கு இரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாடு மருத்துவ நெருக்கடியில் இருக்கிறது. தடுப்பூசியைப் போட மறுப்போருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


பிலிப்பைன்ஸ் நாடு அதிரடி அறிவிப்பு பிலிப்பைன்ஸ் நாட்டில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயக்கம் காட்டுக்கின்றனர் . அந்த நாட்டு மக்கள் தொகையில் 11 கோடி மக்களில் 7 கோடி பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பது அரசின் இலக்கு . இதுவரை 20 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர் . நாட்டில் 14 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் . 24 பேர் இறந்துள்ளனர் . இந்த நிலையில் தடுப்பூசி போட மறுத்தால் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார் .

latest tamil news




டுட்டார்ட்டே தண்டனைகளுக்கு புகழ் பெற்றவர். போதை கடத்தல் கும்பல்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொலை செய்ததால் அச்சமூட்டும் மனிதராக இவர் பார்க்கப்படுகிறார். எனவே இவரின் எச்சரிக்கைக்கு பலன் இருக்கும் என கருதப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
asokan - Palani,இந்தியா
23-ஜூன்-202114:11:59 IST Report Abuse
asokan மிகச்சரியான நடவடிக்கை
Rate this:
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜூன்-202114:04:40 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி இந்தியாவில் தடுப்பூசிக்கு எதிராக வதந்தியைப் பரப்பியவர்களை சிறையில் அடைக்க வேண்டும்...
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-202108:11:01 IST Report Abuse
Sankar Ramu ராகுல், அந்த பக்கம் தெரியாம போய்டாத.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X