பொது செய்தி

இந்தியா

ரயில்வே மைதானங்கள் விற்பனையா? விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சி

Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சென்னை: ரயில்வே துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை விற்பனை செய்வதாக வெளியான தகவல்களால் விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.ரயில்வே துறையில் பணியாற்றிய பாஸ்கரன் 1980ல் ஒலிம்பிக் ஹாக்கி இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்.சர்வதேச அளவில் தடகள போட்டியில் 100க்கும் அதிகமாக பதக்கங்களை வென்ற பி.டி. உஷா இந்திய கிரிக்கெட் அணியின்
ரயில்வே மைதானங்கள், விற்பனை, விளையாட்டு வீரர்கள், அதிர்ச்சி

சென்னை: ரயில்வே துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை விற்பனை செய்வதாக வெளியான தகவல்களால் விளையாட்டு வீரர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

ரயில்வே துறையில் பணியாற்றிய பாஸ்கரன் 1980ல் ஒலிம்பிக் ஹாக்கி இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர்.சர்வதேச அளவில் தடகள போட்டியில் 100க்கும் அதிகமாக பதக்கங்களை வென்ற பி.டி. உஷா இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்ளிட்ட பலர் ரயில்வே துறையில் வேலை பார்த்தவர்கள். மேலும் பத்ம மற்றும் அர்ஜுனா விருது பெற்றவர்களில் பலர் ரயில்வே துறையில் வேலை செய்தவர்கள்.இதற்கு ரயில்வே நிர்வாகம் அளித்த ஊக்கமும் உள்கட்டமைப்பு வசதிகளும் காரணம்.

இந்நிலையில் வணிக மேம்பாட்டுக்கான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார சேவைகள் என்ற பெயரில் 15 விளையாட்டு மைதானங்களை விற்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது விளையாட்டு ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து விளையாட்டு ஆர்வலர்கள் வீரர்கள் கூறியதாவது: நாட்டில் சில கிரிக்கெட் சங்கங்களுக்கு சொந்தமான மைதானங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி உள்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ரயில்வே துறைக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 'பிட் இந்தியா' இயக்கம் குறித்து விளையாட்டு துறை பேசி வருகிறது. மறுபக்கம் ரயில்வே துறை விளையாட்டு மைதானங்களை அழிக்க முயற்சி செய்கிறது.வரும் 2028ல் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 25க்கும் அதிகமான பதக்கங்களை பெற வேண்டும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.


latest tamil newsமறுபுறம் விளையாட்டு மைதானங்களை விற்கும் முடிவை ரயில்வே துறை எடுத்துள்ளதால் வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. ரயில்வே துறைக்கு சொந்தமான மைதானங்களை விற்க எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் கொம்பால குறுணி பால் கறக்கற மாடாயிருந்தாலும் கூரையை பிடுங்கற மாடு உதவாதுன்னு ஒரு தமிழ் பழமொழி PSU பலவும் வித்தாச்சு அயோத்யா இடம் பிரச்சினையே பல கோடி இதெல்லாம் எத்தை கொடிகளோ? "காவி பூஞ்சை" பாதித்தவர்கள் தான் விளக்கணும்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் IN THIS CONNECTION THE FOLLOWING FACTS ARE TO BE REVISITED. IN 1985 M.G. R MADE A DECISION TO PULL DOWN THE FIRE-RAVAGED MOORE MARKET AFTER A VISIT TO THE HERITAGE PREMISES. I SENT A DETAILED LETTER REQUESTING THE RAILWAY AUTHORITIES TO GET THE LAND FOR AUGMENTATION OF CENTRAL STATION WHICH DEALS WITH TRAINS TO WESTERN SIDE KERALA KARNATAKA ANDHRA AND MAHARASHTRA CAN BE DEALT IN THE NEW PLATFORMS ON THE WESTERN SIDE OF KOOVAM. TRAINS TO NORTH AND NORTHEAST (DELHI AND CALCUTTA) COULD BE DEALT WITH SEAMLESSLY IN THE EXISTING CENTRAL STATION PLATFORMS. ALL SUBURBAN TRAIN PLATFORMS COULD BE IN THE MIDDLE, I SUGGESTED. THE RAILWAYS, NEEDING LAND TO EXPAND THE CONGESTED CENTRAL STATION, TRIED UNSUCCESSFULLY TO TAKE OVER THE MARKET. THE STRUCTURE WAS LATER RAZED TO MAKE WAY FOR THE NEW CHENNAI SUBURBAN RAILWAY TERMINUS AND RESERVATION CENTRE. STATE GOVERNMENT FIRST BUILT THE PRESENT MOORE MARKET AND SUBSEQUENTLY THE NEHRU INDOOR STADIUM. THESE COULD HAVE BEEN DONE IN ANY OTHER PLACE IN CHENNAI. HAD THE RAILWAYS GOT THE ENTIRE AREA, IMAGINE THE SPRAWLING CENTRAL STATION WITH ATLEAST TWENTY PLATFORMS. THE MADRAS CENTRAL PRISON WAS RELOCATED IN PUZHAL IN 2006 AND AGAIN I WROTE THAT THE RAILWAYS GET THE LAND FOR ANOTHER COACH MAINTENANCE YARD ON THE NORTHERN SIDE OF EGMORE STATION. THAT WILL ENABLE TAKE THE TRAINS ARRIVING EGMORE EVERY FIFTEEN MINUTES IN THE MORNING NATIVELY ONE TO THE NORTHERN LOCATION AND ANOTHER TO THE EXISTING DEPOT ON THE SOUTHERN SIDE. THIS WILL FACILITATE QUICK CLEARANCE OF PLATFORMS AND BE READY TO RECEIVE MORE TRAINS. BUT THE VACANT PROPERTY WAS HANDED OVER TO CHENNAI METRO RAIL LIMITED (CMRL) FOR REVENUE AUGMENTATION PURPOSE IN 2008. THE COST OF THE 13-ACRE (53,000 M2) LAND WAS ESTIMATED CONSERVATIVELY AT RS. 4.75 BILLION, WHICH WAS NOT FRUCTIFIED AND FINALLY THE STATE GOVERNMENT BUILT THE MADRAS MEDICAL COLLEGE THERE. HENCE IN FINE RAILWAY SHOULD NOT SELL AWAY EVEN A SQUARE INCH OF LAND IT INHERITED, WHICH ARE VERY EXPENSIVE THESE DAYS. NATIVELY RAILWAYS COULD EXCHANGE THE LAND PARCELS JUDICIOUSLY WITH STATE GOVERNMENTS THAT ARE ADJOINING TO MAJOR RAILWAY TERMINALS FOR EXPANSION AS AFORE SAID.
Rate this:
Cancel
Vellai Durai Ram - chennai,இந்தியா
23-ஜூன்-202112:17:00 IST Report Abuse
Vellai Durai Ram கண்ணையா போன்றவர்களின் அந்தரங்க சொத்துபோல இருக்கும் பெரம்பூர் ரயில்வே மைதாங்கள் போல் விளையாட்டு மைதானங்கள் இருந்தால் அது இல்லாமல் இருப்பதே மேல்
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
23-ஜூன்-202113:49:21 IST Report Abuse
Dhurveshஉனக்கு கணைய மேலே கோவம் , நாளை உன் பிள்ளை எப்படி விளையாடுவான் உன்னை போல எட்டப்ப பூபதிகள் இருக்கும் வரை TN கஷ்டம் தான்...
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்., - தமிழகம்,இந்தியா
23-ஜூன்-202119:50:47 IST Report Abuse
தமிழ்வேள்ரயில்வே மைதானம் கன்னையா சொத்தா? அடியாட்களோடு வலம் வருவது ...ரயில்வே ஊழியர்களையே மைதானத்துக்குள் விட மறுப்பது போன்றவற்றை உன்னால் தட்டிக்கேட்க இயலவில்லை ..முடிந்தால் கன்னையாவை திருத்து பார்ப்போம் ....கன்னையா திமுக கோஷ்டிக்கு ஆதரவு கொடுத்து பொது சொத்தை ஆட்டையை போடுபவர்களே எட்டப்பர்கள் .....
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்பத்தாண்டுகால ஆட்சியில் கூட்டாளி மோடியின் ஏழாண்டுக்கால ஆட்சியில் அந்த பிரச்சினையை தீர்க்க முடியலையே இம்மென்றால் NSA யை எங்கெங்கோ அனுப்பிக் கொண்டிருந்தார்கள் இதை தீர்க்க முடியாதது ஏனாம்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X