நீட் என்பது மாணவர்கள் விவகாரம். அதற்கு ஏன் நமது அரசியல்வாதிகள் விதம் விதமாய் சாயம் பூசுகின்றனர்...

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
மாநில தன்னாட்சியையும், மாநில தன்னுரிமையையும் நிலைநாட்ட, நீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் என, தமிழக அரசை அறிவுறுத்துகிறேன்.- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்'நீட் என்பது மாணவர்கள் விவகாரம். அதற்கு ஏன் நம் அரசியல்வாதிகள் நாள்தோறும் விதவிதமான சாயம் பூசி வருகின்றனர் என்பது தெரியவில்லையே...' என சொல்ல தோன்றும் வகையில், நாம்
சீமான், ரவிசங்கர் பிரசாத், எஸ்.ஆர்.சேகர், சுப்பிரமணியசாமி, கருணாஸ்,  பீட்டர் அல்போன்ஸ்

மாநில தன்னாட்சியையும், மாநில தன்னுரிமையையும் நிலைநாட்ட, நீட் எனும் தடைக்கல்லை முழுதாக அகற்ற வேண்டும் என, தமிழக அரசை அறிவுறுத்துகிறேன்.
- நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்


'நீட் என்பது மாணவர்கள் விவகாரம். அதற்கு ஏன் நம் அரசியல்வாதிகள் நாள்தோறும் விதவிதமான சாயம் பூசி வருகின்றனர் என்பது தெரியவில்லையே...' என சொல்ல தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.காங்., தலைவர் ராகுல், எங்கு போய் கொரோனா தடுப்பூசி போட்டார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், நீங்கள் எல்லாரும் போட்டுக் கொள்ளுங்கள் என்பது தான், என் பணிவான வேண்டுகோள்.
- மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்


'ராகுலும், சோனியாவும் எங்கு, எப்போது தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்ற சந்தேகம் இன்னும் உங்களுக்கு விலகவில்லை போலும்...' என, சொல்ல தோன்றும் வகையில், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டி.தமிழக சட்டசபையில் கவர்னர் வாசித்த அறிக்கையில் தொலைநோக்கு பார்வையே இல்லை. அரசின் நோக்கம் என்ன என்பதில் தெளிவே இல்லை. வளர்ச்சி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை.
- தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'இதெல்லாம் இருந்தாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் பா.ஜ., இல்லை என்று தானே சொல்லும்...' என, சொல்ல தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.சுதந்திரத்திற்கு முன், யோகாவை பிரபலப்படுத்தியவர், பி.கே.எஸ்.அய்யங்கார். கடந்த 20 ஆண்டுகளாக பாபா ராம்தேவ் பிரபலப்படுத்தி வருகிறார். இதனால், பிரதமர் மோடியின் பரிந்துரையை, ஐ.நா., சபை ஏற்று, சர்வதேச யோகா நாளை அங்கீகரித்துள்ளது.
- பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி


latest tamil news
'பிரதமர் மோடியால் சர்வதேச அளவில், யோகா பிரபலப்படுத்தப்படவில்லை என சொல்ல வந்துள்ளீர்கள். பாதியளவு புரிந்துவிட்டது...' எனக் கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை.தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியுடன், மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்பட்டால் மாற்றம் ஏற்படும், மாபெரும் சக்தியாக உருவாகும்.
- நடிகர் கருணாஸ்


'தேர்தல்களில் சீமான் கட்சிக்கு அதிக ஓட்டுகள் விழுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா...' என, கேட்க தோன்றும் வகையில், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவர், நடிகர் கருணாஸ் பேட்டி.கொரோனா மருத்துவ செலவால் ஆறு கோடி இந்தியர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மூன்றாம் அலை தொற்று வருவதாக கூறுகின்றனர். மத்திய - மாநில அரசுகள் பிற செலவுகளை ஒதுக்கிவிட்டு, ஏழைகளுக்கான மருத்துவ வசதியை மேம்படுத்த வேண்டும்.
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


'கொரோனா தொற்று பரவல் குறைந்ததும், வழக்கமான நடைமுறைகள் வந்து விட்டன. மூன்றாவது அலை வந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என, அரசுகள் கருதி விட்டன...' எனக் கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-ஜூன்-202122:02:38 IST Report Abuse
Rajagopal சீமான் போன்றவர்கள் பாரதத்தின் ஒருமைப்பாட்டை சிதைத்து, தங்களுக்கு அதிகாரம் வளர முயல்கிறார்கள். இவர்கள் இருப்பதை சீர்குலைய செய்வதில் வல்லவர்கள். இவர்களால் எதையும் வளர்க்க இயலாது. வசனம் பேச தெரியும். பிறகு இப்போதைய திமுக அரசு போல, வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு எதையும் நிறைவேற்றாமல் மோதல்களை ஏற்படுத்தி சமாளிக்க முயல்பவர்கள். இவர்கள் இருக்க வேண்டியது சிறையில்.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
23-ஜூன்-202118:48:43 IST Report Abuse
Poongavoor Raghupathy உதயநிதி நீட்டின் PAAடங்களை பற்றி பேசுகிறார். உதயநிதிக்கும் நீட்டின் பாடங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. கருணாநிதி தமிழ்நாட்டை விலை கொடுத்து வாங்கினார் போலவும் உதயநிதி இளவரசர் போலவும் பேசுகிறார். இது தமிழ் மக்களின் சாபக்கேடு .
Rate this:
Cancel
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
23-ஜூன்-202118:22:21 IST Report Abuse
கொக்கி குமாரு ஹி...ஹி...ஹி...நாம் டுமிழர் கட்சியின் சிறப்பு என்னான்னா, 18 வயதில் ஒரு இளைஞன் நாம் டுமிழரில் சேருவான். உணர்ச்சி பொங்க சீமானின் தமிழ் பேச்சில் மயங்கி 23 வயது வரைக்கும் அவர் கட்சியில் தீவிரமாக இருப்பான். 23 வயதில் படித்து முடித்ததும் உலக விஷயங்கள் தெரியவந்ததும் இவர் பின்னாடியா இவ்வளவு நாள் இருந்தோம்னு தலையில் அடிச்சிகிட்டு நாம் டுமிழரை விட்டுவிட்டு ஓடி விடுவான்.ஹி...ஹி...ஹி..நம்மவரின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சிறப்பு என்னான்னா, நாம் டுமிழரில் இருந்து 23 வயதில் ஓடிவரும் இளைஞன் வாட்ஸ் அப், பேஸ் புக், ட்விட்டர் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு நம்மவர் கமலை மிக பெரிய அரசியல் வல்லுநர் போல நினைத்துக்கொண்டு மக்கள் நீதி மையத்தில் சேருவான். நம்மவரின் யாருக்கும் புரியாத ட்விட்டர் கமெண்டுகளை படித்துவிட்டு, தனக்கு புரிந்தாய் காட்டிக்கொண்டு, தலை கால் புரியாமல் ஆடி நம்மை காக்க வந்த ஆண்டவர் கமல்தான் என்று கனவுலகில் மிதப்பான். 30 வயதில் அனுபவத்தால் வரும் உலக விஷயங்களை புரிந்துகொண்டு கமல் நடத்துவது கட்சி அல்ல வெறும் வாட்ஸ் அப் குரூப்தான் என்ற உண்மையை தெரிந்துகொண்டு இவர் பின்னாடியா இவ்வளவு நாள் இருந்தோம்னு தலையில் அடிச்சுகிட்டு மய்யத்தை விட்டு ஓடி விடுவான்.ஹி...ஹி...ஹி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X