ஆன்லைன் அதிரடி விற்பனைகளுக்கு கடிவாளம் போடுகிறது மத்திய அரசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆன்லைன் 'அதிரடி' விற்பனைகளுக்கு கடிவாளம் போடுகிறது மத்திய அரசு

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (4)
Share
புதுடில்லி : விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, உண்மைக்கு மாறான மற்றும் தவறான தகவல்கள் தந்து விற்பனை செய்வது, 'பிளாஷ் சேல்ஸ்' எனும் பெயரில், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அதிகப்படியான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுவது ஆகியவற்றை தடை செய்வது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக, பொதுமக்களின் கருத்தையும் கோருகிறது.தகவல் பொருட்கள்
ஆன்லைன், விற்பனை, கடிவாளம், மத்திய அரசு

புதுடில்லி : விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, உண்மைக்கு மாறான மற்றும் தவறான தகவல்கள் தந்து விற்பனை செய்வது, 'பிளாஷ் சேல்ஸ்' எனும் பெயரில், குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அதிகப்படியான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுவது ஆகியவற்றை தடை செய்வது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக, பொதுமக்களின் கருத்தையும் கோருகிறது.


தகவல்


பொருட்கள் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை கூறி விற்பதில் இருந்து, 'பிளாஷ் சேல்' எனும் பெயரில், அதிகப்படியான தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடுவது வரையிலான பல்வேறு வழிகளை, பல மின்னணு விற்பனை நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.இது குறித்து அண்மைக்காலமாக அதிகளவில் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து மத்திய அரசு, மின்னணு வர்த்தகம் குறித்த, 'நுகர்வோர் பாதுகாப்பு விதிகள் 2020'ல் சில திருத்தங்களை முன்மொழிந்துள்ளது.

அத்துடன், மின்னணு வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், 'மத்திய தொழில் மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை'யிலும் பதிவு செய்வதை கட்டாயமாக்குவது குறித்தும் பொதுமக்களின் கருத்துகளை கோரியுள்ளது.இன்டர்நெட் வாயிலான தேடல் முடிவுகளை பயன்படுத்தி, பயனர்களை தவறாக வழிநடத்துவதை தடை செய்வது, மின்னணு வர்த்தக நிறுவனங்கள், தலைமை இணக்க அதிகாரி மற்றும் குறை தீர்க்கும் அதிகாரி ஆகியோரை நியமிப்பது போன்ற அம்சங்களும் இந்த திருத்தங்களில் இடம்பெற்று உள்ளன.

மேலும், இந்த திருத்தங்களின்படி, ஒரு அரசு நிறுவனத்திடமிருந்து, எந்த ஒரு சட்டத்தின் கீழும், விசாரணைக்கான உத்தரவு கிடைத்த, 72 மணி நேரத்துக்குள்ளாக, சம்பந்தப்பட்ட தகவல்களை நிறுவனங்கள் வழங்க வேண்டியதிருக்கும்.


நடவடிக்கை


இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அண்மைக்காலமாகவே, பல மின்னணு வர்த்தக நிறுவனங்கள், அதிரடியான அறிவிப்புகள் வாயிலாக, வாடிக்கையாளர்களை எளிதாக கவர்ந்து, விற்பனையை பெருக்கிக் கொள்கின்றன.இதனால் அனைத்து நிறுவனங்களுக்கும், வர்த்தகம் செய்வதற்கான சம வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.

குறிப்பாக, சிறு நிறுவனங்கள் போட்டியிட முடியாத நிலை செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி, பல வர்த்தக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். மேலும், பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு வகையான புகார்கள் வருகின்றன. இதையடுத்து, இத்தகைய தளங்களில் நடைபெறும் தவறான விற்பனைகளை தடை செய்வது குறித்த முயற்சியில் அரசு இறங்கி உள்ளது.


latest tamil news


அதேசமயம் வழக்கமாக நியாயமான வகையில் நடைபெற்று வரும், 'பிளாஷ் சேல்ஸ் ' நடைமுறைக்கு, இதனால் எந்த பாதிப்பும் இருக்காது.மாறாக, 'பேக் டு பேக், பிளாஷ் சேல்ஸ்' எனும் பெயர்களில் வாடிக்கையாளர்களுக்கான தேர்வை குறிக்கும் நடவடிக்கைகள் தடை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X