அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: வடகொரியா திட்டவட்டம்| Dinamalar

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை: வடகொரியா திட்டவட்டம்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (1)
Share
சியோல்: அமெரிக்காவுடன் ஒருபோதும் வட கொரியா பேச்சுவார்த்தையில் ஈடுபடாது' என, அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.'அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்க வேண்டும்; ஆனால், அதைவிட அதிகமாக அந்த நாட்டை எதிர்கொள்ளவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்' என, கடந்த வாரம் கிம் ஜோங் உன் கூறியிருந்தார்.இதையடுத்து, இருதரப்பு

சியோல்: அமெரிக்காவுடன் ஒருபோதும் வட கொரியா பேச்சுவார்த்தையில் ஈடுபடாது' என, அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரி கிம் யோ ஜோங் தெரிவித்துள்ளார்.



latest tamil news



'அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்க வேண்டும்; ஆனால், அதைவிட அதிகமாக அந்த நாட்டை எதிர்கொள்ளவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்' என, கடந்த வாரம் கிம் ஜோங் உன் கூறியிருந்தார்.இதையடுத்து, இருதரப்பு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கலாம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.


latest tamil news



இதற்குப் பதிலளிக்கும் வகையில் கிம் யோ ஜோங் கூறியதாக வட கொரிய அரசுக்குச் சொந்தமான கேசிஎன்ஏ செய்தி நிறுவனம், 'அமெரிக்காவுடன் வட கொரியா பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக அமெரிக்க அரசு நம்புகிறது. தங்களைத் தாங்களே திருப்திப்படுத்திக்கொள்ள இந்த நம்பிக்கை உதவலாம். ஆனால், உண்மையில் அதற்கான முயற்சியில் அமெரிக்கா இறங்கினால், அந்த நாட்டுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்' என, குறிப்பிட்டுள்ளது.


latest tamil news



முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தின்போது, அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியா ஒப்புக் கொண்டது. எனினும், 'தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்' என, அதிபர் கிம் ஜோங் உன் வலியுறுத்தினார். இதற்கு டிரம்ப் அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. அதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X