பொது செய்தி

இந்தியா

'இந்தியா' என்னும் பெயரை 'பாரத்' என மாற்ற வேண்டும்: நடிகை கங்கனா வலியுறுத்தல்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (66)
Share
Advertisement
புதுடில்லி: 'நாட்டின் பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற வேண்டும்' என, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.சர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டதற்காக நடிகை கங்கனாவின் கணக்கை, டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீக்கியது. இதையடுத்து அவர், 'கூ' என்ற சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார். அதிலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நேற்று அவர்

புதுடில்லி: 'நாட்டின் பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்ற வேண்டும்' என, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வலியுறுத்தியுள்ளார்.latest tamil newsசர்ச்சைக் கருத்துகளைப் பதிவிட்டதற்காக நடிகை கங்கனாவின் கணக்கை, டுவிட்டர் நிறுவனம் சமீபத்தில் நீக்கியது. இதையடுத்து அவர், 'கூ' என்ற சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளார். அதிலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நேற்று அவர் பதிவிட்டுள்ளதாவது:


latest tamil newsஇந்தியா என்ற பெயர் அடிமை பெயராக உள்ளது. எனவே அதை மாற்றி, நமது நாட்டின் பழைய பெயரான, பாரதம் என்பதையே வைக்க வேண்டும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய உலகின் மலிவான நகலாக இல்லாமல், வேதங்கள், பகவத் கீதை மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால் உலகின் மிகப்பெரிய நாடாக நாம் வெளிப்படுவோம். எனவே இந்த அடிமைப் பெயரான இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்று மாற்ற முடியுமா?


latest tamil newsஇந்தியா என்ற அடிமைப் பெயரை, பிரிட்டிஷார் நமக்குக் கொடுத்தனர். அதாவது சிந்து நதியின் கிழக்குப் பகுதியைக் குறிக்கும் வகையில் இது தரப்பட்டது. இப்படியெல்லாமா பெயரை வைப்பார்கள்? உங்கள் குழந்தைக்கு சின்ன மூக்கு, இரண்டாவதாகப் பிறந்தவன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்க முடியுமா? பிஎச் (பவ்), ரா (ராக்), தா (தாள்) என்ற பெயர்கள் இணைந்ததே பாரதம். நாம் அடிமைப்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே நாம் கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிக்கவர்களாகவும் இருந்தோம். எனவே பழைய பெயரான பாரத் என்று மாற்றி, இழந்த பெருமையை மீட்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-202105:57:16 IST Report Abuse
சுபீஷ்குமார்.G பாரத பாக்யவிதாதா... ஆங்கிலேயனை விரட்டிய தியாகிகளின் ஆத்மா சாந்தி அடையும்.. வந்தே பாரத மாதரம்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202100:17:57 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN கங்கனா சொன்னதில் தவறில்லை என்ன, அந்நிய அடிமைகளுக்கு எரிச்சல் வரும்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
23-ஜூன்-202123:30:56 IST Report Abuse
Vena Suna 'கூ' என்ற சமூக வலைத்தளமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X