அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அரசு என கூறுவதில் என்ன தவறு?: ஸ்டாலின்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (155)
Share
Advertisement
சென்னை: 'மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்றும், ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல, இந்திய அரசியல் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதை பயன்படுத்துவோம்,' என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியுள்ளார்.இன்று (ஜூன் 23) கூடிய சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ., எம்எல்ஏ., நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலினிடம் ‛எந்த நோக்கத்துடன் ஒன்றியம்
TamilnaduCM, Stalin, Union Government, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், ஒன்றிய அரசு

சென்னை: 'மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என்றும், ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல, இந்திய அரசியல் சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதை பயன்படுத்துவோம்,' என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறியுள்ளார்.

இன்று (ஜூன் 23) கூடிய சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ., எம்எல்ஏ., நயினார் நாகேந்திரன், முதல்வர் ஸ்டாலினிடம் ‛எந்த நோக்கத்துடன் ஒன்றியம் பயன்படுத்தப்படுகிறது' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஸ்டாலின் பதிலளித்ததாவது: ஒன்றிய அரசு என கூறுவது சமூக குற்றமல்ல. சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறதோ அதைதான் சொல்லி இருக்கிறோம். மாநிலங்கள் ஒன்று சேர்ந்தது தான் ஒன்றியம். இது தவறானது அல்ல. ஒன்றியம் என்ற வார்த்தையில் கூட்டாட்சி உள்ளது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்தினோம். பயன்படுத்துவோம். பயன்படுத்தி கொண்டே இருப்போம்.


latest tamil news


ஒன்றிய அரசு என கூறுவதை கண்டு யாரும் மிரள வேண்டாம். 1957-ம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சட்டத்தின் முதல் வரியில் ஒன்றியம் என்ற வார்த்தை உள்ளது. மாநிலங்கள் ஒன்று சேர்ந்து இருப்பதே ஒன்றியம் என பொருள். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

மேலும், கோவை தமிழக அரசு புறக்கணிப்பது தொடர்பாக எழுந்த பேச்சுகளுக்கு, ‛கோவையை எக்காரணத்தை கொண்டும் புறக்கணிக்க மாட்டோம். கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்,' எனவும் பதிலளித்தார்.


நீட் ஆதரவு:


latest tamil news


இதனைத் தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ‛நீட் தேர்வில் இருந்து விலக்குபெறுவதே திமுக, அதிமுகவின் உணர்வு. தமிழகத்தில் நீட் விலக்குக்கு ஆதரவு தர பா.ஜ., தயாராக உள்ளதா?' என பா.ஜ., எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், ‛சட்டத்திற்கு உட்பட்டு விதி விலக்கு தரப்பட்டால், பா.ஜ., ஆதரவு தர தயார்,' என குறிப்பிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (155)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
27-ஜூன்-202104:41:48 IST Report Abuse
meenakshisundaram இந்த மாதிரி ஏதாவது ஏடா கூடமா என்ன பேசுறோம் அதுக்கு இன்னா அர்த்தம் னு தெரியாம நீ இருந்ததனாலேயே உங்க அப்பாரு உன் கிட்டே ஏதும் பெரிய பொறுப்பை கடாசி வர தரலே?
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
24-ஜூன்-202113:28:07 IST Report Abuse
சோணகிரி வார்டு கவுன்சிலர் பதவிக்குக்கூட லாயக்கில்லாத தகுதியில்லாத படிப்பறிவில்லாத ஆளெல்லாம் முதல்வரானால் இப்படித்தான் தலைகால் புரியாமல் ஆடுவார்கள்...
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
24-ஜூன்-202101:42:09 IST Report Abuse
SKANDH MISSA அல்லது MISA அதுபோல தான் . தவறை திருத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X