வங்கிகளின் பெயருக்கு மல்லையா, சோக்சி, நீரவ் மோடியின் சொத்துக்கள் மாற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வங்கிகளின் பெயருக்கு மல்லையா, சோக்சி, நீரவ் மோடியின் சொத்துக்கள் மாற்றம்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (15)
Share
புதுடில்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர், வங்கிகளில் மோசடி செய்துவிட்டு
Vijay Mallya, Nirav Modi, Mehul Choksi, Assets, Transfer, Banks,

புதுடில்லி: வங்கி மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், பொதுத்துறை வங்கிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக, அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர், வங்கிகளில் மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். இவர்களின் மோசடியாக, இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.22,585.83 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் லண்டனில் தஞ்சம் புகுந்தனர். மெகுல் சோக்சி, ஆன்டிகுவா தப்பி சென்றார். அங்கிருந்து கியூபாவிற்கு தப்ப முயன்ற போது டொமினிக்காவில் பிடிபட்டு சிறையில் உள்ளார்.


latest tamil newsவிஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை, லண்டன் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவிற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், அவர் நாடு கடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.


latest tamil newsலண்டன், தப்பி சென்ற வைர வியாபாரி நீரவ் மோடியும் இந்தியாவின் நாடு கடத்தல் கோரிக்கையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நாடு கடத்தலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


latest tamil newsஇதனிடையே, மோசடி விவகாரத்தில் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சிக்கு சொந்தமான ரூ.22,585,83 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க்துறை முடக்கியிருந்துது. இது, வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பில் 80.45 சதவீதம் ஆகும். இவற்றில், ரூ.9,371 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு மாற்றி அமலாக்கத்துறை உத்தரவிட்டு உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, மும்பை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், முடக்கப்பட்ட குற்றவாளிகளின் சொத்துகளில் ரூ.6,600 கோடி மதிப்புள்ள பங்குகளை வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியது. அதில், பங்குகளை விற்பனை மூலம் வங்கிகளுக்கு ரூ.1,357 கோடி கிடைத்து உள்ளது. அமலாக்கத்துறை முடக்கி உள்ள சொத்துக்களை விற்பனை மூலமாக வங்கிகளுக்கு, விரைவில் ரூ.7981.5 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X