பொது செய்தி

தமிழ்நாடு

நகைக்கடன் விபரம் அனுப்ப கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு

Added : ஜூன் 23, 2021
Share
Advertisement
சென்னை : கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 2018 -- 19 முதல் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன் விபரங்களை அனுப்புமாறு அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கும் கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் தங்க நகைகளுக்கு அடமான கடன்களை


சென்னை : கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 2018 -- 19 முதல் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன் விபரங்களை அனுப்புமாறு அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்களுக்கும் கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் மாநில தலைமை கூட்டுறவு வங்கி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் தங்க நகைகளுக்கு அடமான கடன்களை வழங்குகின்றன.சட்டசபை தேர்தலை முன்னிட்டு 'கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என தி.மு.க. தேர்தல் வாக்குறுதி அளித்தது. அக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 2018 ஏப். முதல் 2021 மார்ச் வரை மாத வாரியாக வழங்கப்பட்ட நகைக்கடன் எண்ணிக்கை தொகை போன்ற விபரங்களை அனுப்புமாறு கூட்டுறவு வங்கிகளுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் நிதி மற்றும் வங்கியியல் பிரிவுக்கான கூடுதல் பதிவாளர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கூட்டுறவு நிறுவனங்கள் வாயிலாக 2018 -- 19, 2019 -- 20, 2020 -- 21ல் வழங்கப்பட்ட பொது நகைக்கடன்கள் விபரங்களை அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள் தங்களது வங்கி தொடர்பான விபரங்களை மாவட்ட வாரியாக அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X