முதல் டோஸ் அஸ்ட்ரா ஜெனெகா, 2வது டோஸ் மாடர்னா; மாறி மாறி செலுத்திக்கொண்ட ஜெர்மன் சான்சலர்| Dinamalar

முதல் டோஸ் அஸ்ட்ரா ஜெனெகா, 2வது டோஸ் மாடர்னா; மாறி மாறி செலுத்திக்கொண்ட ஜெர்மன் சான்சலர்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (4)
Share
பெர்லின்: ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கலா முதல் டோஸ் கோவிட் தடுப்பூசியாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியும், 2வது டோஸ் தடுப்பூசியாக மாடர்னா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அங்கு 60 வயதைக் கடந்தவர்களுக்கு அஸ்ட்ரா
Angela Merkel, German Chancellor, CovidVaccine, Moderna, Second Jab, AstraZeneca, First Dose, ஏஞ்சலா மெர்கலா, ஜெர்மனி, அஸ்ட்ரா ஜெனெகா, மாடர்னா, கோவிட் தடுப்பூசி, சான்சலர்

பெர்லின்: ஜெர்மனி சான்சலர் ஏஞ்சலா மெர்கலா முதல் டோஸ் கோவிட் தடுப்பூசியாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியும், 2வது டோஸ் தடுப்பூசியாக மாடர்னா தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார்.

ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக அங்கு 60 வயதைக் கடந்தவர்களுக்கு அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்பட்டது. இதனால் முதல் டோஸாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், அடுத்த டோஸாக வேறு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என ஜெர்மன் அரசு அறிவுறுத்தியது.


latest tamil news


இந்நிலையில், 66 வயதான ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல், கடந்த ஏப்ரல் மாதம் முதல் டோஸாக அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியும், தற்போது 2வது டோஸாக மாடர்னா தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X