இன்று முதல் இந்தியர்களுக்கு 'பச்சைக்கொடி': கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது யு.ஏ.இ

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
துபாய்: இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமடைந்ததால் இந்தியா - அரபு எமிரேட்ஸ் இடையேயான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்தியாவில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்ததையடுத்து, அரபு மக்களும், கோல்டன் விசா வைத்துள்ளவர்களும் மட்டுமே, சிறப்பு விமானம் மூலமாக யு.ஏ.இ செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் இன்று (ஜூன் 23) யு.ஏ.இ விடுத்துள்ள

துபாய்: இந்தியாவில் கோவிட் பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமடைந்ததால் இந்தியா - அரபு எமிரேட்ஸ் இடையேயான விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. இந்தியாவில் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்ததையடுத்து, அரபு மக்களும், கோல்டன் விசா வைத்துள்ளவர்களும் மட்டுமே, சிறப்பு விமானம் மூலமாக யு.ஏ.இ செல்ல அனுமதிக்கப்பட்டனர்.



latest tamil news



இந்நிலையில் இன்று (ஜூன் 23) யு.ஏ.இ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது: அமீரகத்தில் குடியிருப்பு மற்றும் வேலைவாய்ப்பு விசா வைத்துள்ளவர்கள் அமீரகம் வர இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. ஆனால் இங்கு வரும் முன், யு.ஏ.இ பரிந்துரைத்துள்ள தடுப்பூசிகளான 'பைசர் பயோஎன்டெக், ஸ்புட்னிக் வி, கோவிஷீல்டு, சினோபார்ம்' இவற்றில் ஏதாவது ஒரு தடுப்பூசியை பயணிகள் இரண்டு டோஸ் செலுத்தி இருக்க வேண்டும்.


latest tamil news



மேலும் விமான பயணத்திற்கு 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட கோவிட் பரிசோதனை சான்றிதழும் உடன் வைத்திருக்க வேண்டும். பயணிகள் யு.ஏ.இ வந்தவுடன் இங்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு 24 மணி நேரம் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூன்-202103:50:14 IST Report Abuse
ஆப்பு அங்கே வேலை செய்யும் ஏர் ஹோஸ்டஸ் யாரும் அந்த நாட்டுப் பெண்கள் கிடையாது. ஐரோப்பா, ஆப்ரிக்கா, பிலிப்பைன்ஸ் லேருந்து கொண்டாந்து இறக்கி அந்த ஊர் டிரெஸ்ஸை மாட்டி விட்டுடறாங்க. பைலட்கள் கூட அப்படியே...
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
23-ஜூன்-202120:30:09 IST Report Abuse
kattus நன்றி,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X