முகக்கவசம் அணிய தேவையில்லை: இத்தாலி அறிவிப்பு| Dinamalar

முகக்கவசம் அணிய தேவையில்லை: இத்தாலி அறிவிப்பு

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (2)
Share
ரோம்: தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் பரவலால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உலக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவிட் வைரசில் இருந்து காத்திட,
Italy, LiftMandatory, Masks, Outdoors, Pandemic, Slows, இத்தாலி, முகக்கவசம், விலக்கு, கோவிட், பரவல், குறைவு

ரோம்: தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி அரசு அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 வைரஸ் பரவலால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவிட் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உலக ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவிட் வைரசில் இருந்து காத்திட, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் சில நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன்காரணமாக, இத்தாலியில் சில பகுதிகளில் முகக்கவசம் அணிவதில் பொதுமக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛நாட்டில் கோவிட் பாதிப்பு குறைந்த பகுதிகளில் முகக் கவசங்கள் அணிவதிலிருந்து பொது மக்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. அதே சமயம் கோவிட் பாதிப்பு அதிகம் உள்ள ஒரு சில பகுதிகளில் அந்த தளர்வுகள் பொருந்தாது' என அறிவித்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X