தடுப்பூசி போட மறுத்து இந்திய விமானப் படையையே எதிர்க்கும் ஊழியர்| Dinamalar

தடுப்பூசி போட மறுத்து இந்திய விமானப் படையையே எதிர்க்கும் ஊழியர்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (13)
Share
ஆமதாபாத்: கோவிட் தடுப்பூசி போட விரும்பாத இந்திய விமானப் படை ஊழியரிடம் 'ஏன் பணி நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது' என கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.இந்திய விமானப் படையில் ஜாம்நகரில் கீழ்நிலை ஊழியராக இருப்பவர் யோகேந்தர் குமார். இவரை தடுப்பூசி போட்டுக்கொள்ள படைப்பிரிவின் தலைவர்
IAF, Personnel Challenges, Termination, Job, Refusal, Get Jab

ஆமதாபாத்: கோவிட் தடுப்பூசி போட விரும்பாத இந்திய விமானப் படை ஊழியரிடம் 'ஏன் பணி நீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது' என கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை எதிர்த்து அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்திய விமானப் படையில் ஜாம்நகரில் கீழ்நிலை ஊழியராக இருப்பவர் யோகேந்தர் குமார். இவரை தடுப்பூசி போட்டுக்கொள்ள படைப்பிரிவின் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார். அது தொடர்பாக யோகேந்தர் அவருக்கு எழுதிய கடிதத்தில், தான் ஆயுர்வேத மருந்துகளைப் பயன்படுத்துவதாகவும், அதில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் மட்டுமே அலோபதி மருந்துகளை எடுப்பேன் என கூறியுள்ளார்.


latest tamil news


அதனை ஏற்றுக்கொள்ளாத விமானப் படை நிர்வாகம் “தடுப்பூசிக்கு எதிரான உங்களின் நிலைப்பாடு முற்றிலும் ஒழுக்கக்கேடானது என்றும், இப்படியே பணியில் தொடர்ந்தால் பிற விமானப் படை வீரர்களின் உடல் நலனுக்கு கடும் பாதிப்பாக அமையும். உங்களை பணிநீக்கம் செய்ய கருதுகிறோம்.” என குறிப்பிட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அந்நோட்டீஸை எதிர்த்து யோகேந்தர் குமார், குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அம்மனுவில், “ தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததற்காக பணி நீக்கம் செய்வது என்பது மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு முரணானது மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்பின் 14 மற்றும் 21வது பிரிவுகளை மீறுவதாகும். தடுப்பூசி போட விரும்பாததால் பணிநீக்கம் என்பது முற்றிலும் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு முரணானது. தனது விருப்பப்படி சிகிச்சை பெற ஒருவருக்கு உரிமை உண்டு. தடுப்பூசி போட கட்டாயப்படுத்த முடியாது. மத்திய அரசும் தடுப்பூசி தன்னார்வமானது, தனிநபர்களுக்கு கட்டாயம் கிடையாது என கூறியுள்ளது.” என்றார்.


latest tamil news


மேலும் தான் ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த ஆயுர்வேத மருந்துகள் மற்றும் தயாரிப்புகளை எடுத்து வருவதாகவும், முகக்கவசம் அணிவது, நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது, கிருமிநாசினி பயன்படுத்துவது போன்ற வழிகாட்டுதல்களைக் தீவிரமாக கடைப்பிடிப்பதாக கூறியுள்ளார். இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜூலை 1 வரை மனுதாரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என விமானப் படைக்கு உத்தரவிட்டனர். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இந்திய விமானப் படை மற்றும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X