மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்: ப.சி கிண்டல்| Dinamalar

மோடி அரசுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம்: ப.சி கிண்டல்

Updated : ஜூன் 23, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (93)
Share
புதுடில்லி: தினசரி தடுப்பூசி போடும் எண்ணிக்கை திங்களன்று 88 லட்சம் என்ற உலக சாதனையை எட்டிவிட்டு, செவ்வாயன்று 54 லட்சமாக குறைந்திருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம், மோடி அரசின் இதுபோன்ற சாதனைகளுக்கு நோபல் பரிசே கூட கிடைக்கலாம் என கிண்டலடித்துள்ளார்.பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன் புதிய தடுப்பூசிக் கொள்கையை அறிவித்தார். அதன்படி மாநிலங்களுக்கான
Chidambaram, CovidVaccine, Secret, Behind, Vaccination Record, சிதம்பரம், கோவிட், தடுப்பூசி, சாதனை, ரகசியம்

புதுடில்லி: தினசரி தடுப்பூசி போடும் எண்ணிக்கை திங்களன்று 88 லட்சம் என்ற உலக சாதனையை எட்டிவிட்டு, செவ்வாயன்று 54 லட்சமாக குறைந்திருப்பதை விமர்சித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம், மோடி அரசின் இதுபோன்ற சாதனைகளுக்கு நோபல் பரிசே கூட கிடைக்கலாம் என கிண்டலடித்துள்ளார்.

பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன் புதிய தடுப்பூசிக் கொள்கையை அறிவித்தார். அதன்படி மாநிலங்களுக்கான தடுப்பூசிகளையும் மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்குகிறது. தடுப்பூசி தயாரிப்பாளர்களிடம் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசும், 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளும் பெறுகின்றன. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியான நபர்கள் அனைவருக்கும் நேரடியாக வந்தாலே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜூன் 21 அன்று அறிமுகமான இந்த முறையினால் ஒரே நாளில் சுமார் 88 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்டு உலக சாதனை படைத்தது இந்தியா. செவ்வாயன்று இந்த எண்ணிக்கை 54.22 லட்சமாக குறைந்தது.


latest tamil news


இதனை காங்., தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஞாயிறன்று பதுக்குவது, திங்களன்று தடுப்பூசி போடுவது, செவ்வாயன்று மீண்டும் பழையபடி நொண்டுவது. இது தான் ஒரே நாளில் உலக சாதனை அளவுக்கு தடுப்பூசி போடுவதன் பின்னே உள்ள ரகசியம். இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் நிச்சயம் இடம்பிடிக்கும். யாருக்கு தெரியும், மருத்துவத்திற்கான நோபல் பரிசு கூட மோடி அரசுக்கு கிடைக்கலாம். மோடி இருந்தால் சாத்தியமாகும் என்பதை இனி மோடி இருந்தால் அதிசயம் நடக்கும் என படியுங்கள்.” என கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X