இன்று அனைத்து கட்சி கூட்டம்: டில்லியில் குவிந்த காஷ்மீர் தலைவர்கள்

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : ஜம்மு - -காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க, நான்கு முன்னாள் முதல்வர்கள் உட்பட, 14 பேர் டில்லி வந்தடைந்தனர்.ஜம்மு - -காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக
 Jammu and Kashmir, LoC put on alert ahead காஷ்மீர் விவகாரம்: நாளை பிரதமர் ,அனைத்து கட்சி கூட்டம் of all-party meet on J&K called by PM Modi


புதுடில்லி : ஜம்மு - -காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க, நான்கு முன்னாள் முதல்வர்கள் உட்பட, 14 பேர் டில்லி வந்தடைந்தனர்.

ஜம்மு - -காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து, 2019ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆக உள்ளது.


latest tamil news
இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி வருவதால், அதற்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் கிடைத்தன.

இந்நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், டில்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடக்க உள்ளது.

இதில் பங்கேற்க, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, அந்த அழைப்பை ஏற்று, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட, 14 அரசியல் கட்சித் தலைவர்கள், கூட்டத்தில் பங்கேற்க, நேற்று டில்லி வந்தடைந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Marshal Thampi - Nagercoil,இந்தியா
24-ஜூன்-202102:10:41 IST Report Abuse
Marshal Thampi நடந்து முடிந்த கதை. இனி பிரச்சன்னையினை வளர்க்க பார்க்கிறதா மத்திய அரசு UP தேர்தல் வருகிறது. அங்கே குழப்ப நிலை அதற்க்கு கதை தயார் பண்ண பார்க்கிறது திரு மோடி அரசு'
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஜூன்-202122:14:46 IST Report Abuse
Pugazh V அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இந்நான்கும் இழுக்காம் இயன்றதறம்
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
23-ஜூன்-202121:08:03 IST Report Abuse
வெகுளி ஹிஹி.... வில்லங்கம் பண்ணுபவர்களை ஆபீசுக்கு அழைக்கும் சிவாஜி பட சீன் நாளைக்கு இருக்கு.... முஃதி, அப்துல்லா வகையறாக்கள் ஸ்லொ மோஷனில் ஆபீஸுலிருந்து வெளியே விழுந்து என்ன சொல்ல போறாங்களோ.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X