பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 6,596 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் 6,596 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 166 பேர் உயிரிழந்து உள்ளனர். 10,432 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 33 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 42 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் 6,596 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 166 பேர் உயிரிழந்து உள்ளனர். 10,432 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 33 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 42 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 70,105 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 6,596 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,43,415 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,16,75,744 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 3,709 பேர் ஆண்கள், 2,887 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,28,916 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,14,461 ஆகவும் அதிகரித்து உள்ளது. 10,432 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,58,785 ஆக உயர்ந்துள்ளது.

166பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 57 பேர் தனியார் மருத்துவமனையிலும், 109 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,746 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்



latest tamil news




latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
24-ஜூன்-202100:09:25 IST Report Abuse
J. G. Muthuraj சரசரவென குறைந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த இருநாட்களாக 'ட ல்' அடிக்கிறது இதோடு இறக்கம் அடைத்துப்போய் மறுபடியும் உயரும் சூழ்நிலை வந்துவிடக்கூடாது. சென்னை நல்ல முன்னேற்றம் காண்பித்துள்ளது....சென்னையை விட்டு போனவர்கள் திரும்புகிறார்கள்.....ஆனால், புதிய வைரஸ் ஒரு நோயாளிக்கு வந்துவிட்டதே.....அந்த வைரஸ் பலருக்கும் பரவாதபடி தடுக்க வேண்டும். மூன்றாம் அலையை எதிர்கொள்ள போதிய ஆக்சிஜன் தேவை.....அதிக படுக்கைகள் மாத்திரம் போதாது....தமிழகமே இறைவனிடத்தில் ஆரோக்கியத்தை கேள்....
Rate this:
Cancel
R PURUSHOTHAMAN - Arni,இந்தியா
23-ஜூன்-202120:33:42 IST Report Abuse
R PURUSHOTHAMAN Good progress........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X