சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

எல்லாம் நேரம் தான்!

Added : ஜூன் 23, 2021
Share
Advertisement
எல்லாம் நேரம் தான்!'வாழ்க்கை ஒரு வட்டம். இன்று உச்சியில் இருப்பவர்கள், நாளை அடி மட்டத்துக்கு வந்து தான் ஆக வேண்டும்' என, தத்துவத்தை உதிர்க்கிறார், பீஹார் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா தலைவருமான ஜிதன்ராம் மஞ்சி.இவர், ஒரு காலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தவர். நிதிஷ் குமாருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டபோது, ஜிதன்ராம்

அக்கம் பக்கம்


எல்லாம் நேரம் தான்!


'வாழ்க்கை ஒரு வட்டம். இன்று உச்சியில் இருப்பவர்கள், நாளை அடி மட்டத்துக்கு வந்து தான் ஆக வேண்டும்' என, தத்துவத்தை உதிர்க்கிறார், பீஹார் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா தலைவருமான ஜிதன்ராம் மஞ்சி.இவர், ஒரு காலத்தில் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தவர். நிதிஷ் குமாருக்கு ஒரு பிரச்னை ஏற்பட்டபோது, ஜிதன்ராம் மஞ்சியை முதல்வர் பதவியில் அமர்த்தினார். மீண்டும் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் நாடியபோது, பதவி விலக மறுத்து அடம் பிடித்தார் மஞ்சி. ஆனால் பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக இருந்ததால், துாக்கி வீசப்பட்டார், மஞ்சி. தனியாக கட்சியை துவக்கிய அவர், 'நிதிஷ் குமாரை அரசியலில் இருந்து ஒழித்துக் கட்டுவதே என் இலக்கு' என, சபதம் செய்தார். காலம் செய்த கோலத்தால், இப்போது நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணியிலேயே, மஞ்சியின் கட்சியும் இடம்பெற்றுள்ளது. இவரது கட்சிக்கு நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

இவர்கள் கூட்டணியிலிருந்து வெளியேறினால், நிதிஷ் குமார் அரசு கவிழும் ஆபத்தும் உள்ளது. இந்த ஒரு விஷயத்தை வைத்து, நிதிஷ் குமாரை வெறுப்பேற்றி வருகிறார் மஞ்சி.நிதிஷின் அரசியல் எதிரியான லாலு பிரசாத் யாதவை, அடிக்கடி புகழ்ந்து பேசுகிறார். வெறுப்பின் உச்சத்தில் இருக்கும் நிதிஷ் குமார், 'எல்லாம் நேரம் தான்' என, புலம்புகிறார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X