'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' கோரிக்கை நிராகரிப்பு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' சமூக வலைதளங்களின் புதிய தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கை தொடர்பாக தகவல் கேட்டு சி.சி.ஐ., எனப்படும் இந்திய தொழில் போட்டி கமிஷன் அனுப்பிஉள்ள உத்தரவுக்கு தடை விதிக்க, டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.வாட்ஸ் ஆப் சமூக வலைதளம் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை திருத்தியுள்ளது. அதன்படி, பயனாளிகளின் தகவல்கள், தாய்
வாட்ஸ் ஆப், பேஸ்புக்,நிராகரிப்பு

புதுடில்லி:'பேஸ்புக், வாட்ஸ் ஆப்' சமூக வலைதளங்களின் புதிய தனிநபர் தகவல் பாதுகாப்பு கொள்கை தொடர்பாக தகவல் கேட்டு சி.சி.ஐ., எனப்படும் இந்திய தொழில் போட்டி கமிஷன் அனுப்பிஉள்ள உத்தரவுக்கு தடை விதிக்க, டில்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

வாட்ஸ் ஆப் சமூக வலைதளம் தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான கொள்கையை திருத்தியுள்ளது. அதன்படி, பயனாளிகளின் தகவல்கள், தாய் நிறுவனமான, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் மற்றும் டில்லி உயர் நீதிமன்றத்தில் பதியப்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன.இந்நிலையில், இந்த நிறுவனங்களின் தனிநபர் கொள்கையால், தொழில் போட்டிக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, சி.சி.ஐ., விசாரிக்கிறது.

அது தொடர்பான தகவல்களை அளிக்கும்படி, சமூக வலைதளங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து, பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்கள், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.இந்நிலையில், சி.சி.ஐ., உத்தரவுக்கு தடை விதிக்க, தனி நீதிபதி மறுத்து விட்டார்.

வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு, தன் உத்தரவில் கூறியுள்ளதாவது:சி.சி.ஐ., பிறப்பித்துள்ள உத்தரவில் மேல் நடவடிக்கை எடுக்க தடை கோரி, வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு, ஜூலை 9ல் மற்றொரு அமர்வில் விசாரணைக்கு வருகிறது.இந்த இரண்டு வழக்குகளிலும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால், எந்த தடையும் விதிக்க முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
24-ஜூன்-202107:51:46 IST Report Abuse
blocked user சமூக வலைத்தளங்கள் தாங்களே ஒரு தன் அரசாங்கம் என்ற அளவில் அலப்பரையைக் கொடுக்கிறார்கள். அவர்களை அடக்கி வைப்பது நாட்டுக்கு நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X