கல்வான் மோதலுக்கு பின் சீனா கற்றுக்கொண்டது என்ன?| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கல்வான் மோதலுக்கு பின் சீனா கற்றுக்கொண்டது என்ன?

Added : ஜூன் 23, 2021
Share
புதுடில்லி:''கடந்த ஆண்டு, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் எல்லையின் இதர பகுதிகளில் நடந்த மோதலை பார்த்த பின், தங்கள் வீரர்களுக்கு இன்னும் சிறப்பான பயிற்சியும், தயாரிப்பும் அவசியம் என்பதை, சீன ராணுவம் உணர்ந்துள்ளது,'' என, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.இது குறித்து ஜெனரல் பிபின் ராவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:சீன
 கல்வான் மோதலுக்கு பின் சீனா கற்றுக்கொண்டது என்ன?

புதுடில்லி:''கடந்த ஆண்டு, கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் எல்லையின் இதர பகுதிகளில் நடந்த மோதலை பார்த்த பின், தங்கள் வீரர்களுக்கு இன்னும் சிறப்பான பயிற்சியும், தயாரிப்பும் அவசியம் என்பதை, சீன ராணுவம் உணர்ந்துள்ளது,'' என, முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.

இது குறித்து ஜெனரல் பிபின் ராவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:சீன ராணுவம், சாதாரண குடிமக்களை குறுகிய கால பணிக்காக ராணுவத்தில் சேர்க்கிறது. அவர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படாமல், நேரடியாக போர் களத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.கிழக்கு லடாக் போன்ற மலைகள் சூழ்ந்த பகுதி களில், அவர்களுக்கு சண்டையிட தெரிவதில்லை.

கடந்த ஆண்டு, கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் இதர எல்லை பகுதிகளில் நடைபெற்ற மோதலை கண்ட பின், தங்கள் வீரர்களுக்கு இன்னும் சிறப்பான பயிற்சியும், தயாரிப்பும் அவசியம் என்பதை சீன ராணுவம் உணர்ந்துள்ளது.திபெத் போன்ற மலைகள் சூழ்ந்த பகுதி களில் பணியாற்றுவதற்கு தனிப்பட்ட பயிற்சிகள் தேவை. அதில், நம் வீரர்கள் கைதேர்ந்தவர்கள்.

நம் வீரர்களுக்கு வழங்கப்படுவது போன்ற பயிற்சிகள், இப்போது, சீன ராணுவத்தினருக்கும் வழங்கப்படுகின்றன.எனவே, நம் கண்காணிப்பு பணிகளை நாம் தீவிரப்படுத்த வேண்டும். சீன ராணுவத்தினரின் ஒவ்வொரு நகர்வையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X