துணை முதல்வர் பதவி கேட்டு பா.ஜ.,வுக்கு நிஷாத் மிரட்டல்

Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி:''என்னை துணை முதல்வராக அறிவித்தால் தான், உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்போம்,'' என, நிர்மல் இந்தியன் ஷோஷிட் ஹமரா தல் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் மிரட்டியுள்ளார். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பா.ஜ., கூட்டணியில், இந்தியன் ஷோஷிட் ஹமரா தல் கட்சி இடம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு
 துணை முதல்வர் பதவி கேட்டு பா.ஜ.,வுக்கு நிஷாத் மிரட்டல்

புதுடில்லி:''என்னை துணை முதல்வராக அறிவித்தால் தான், உ.பி., சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்போம்,'' என, நிர்மல் இந்தியன் ஷோஷிட் ஹமரா தல் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத் மிரட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பா.ஜ., கூட்டணியில், இந்தியன் ஷோஷிட் ஹமரா தல் கட்சி இடம் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன், உத்தர பிரதேச அமைச்சரவையை மாற்றியமைக்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியன் ஷோஷிட் ஹமரா தல் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத், டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். பின், நிஷாத் நிருபர்களிடம் கூறியதாவது:உ.பி.,யில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பா.ஜ., என்னை துணை முதல்வராக அறிவிக்க வேண்டும். இல்லாவிடில், பா.ஜ., கூட்டணியில் இடம்பெற மாட்டோம்.

கிழக்கு உ.பி.,யில், நிஷாத் சமூக மக்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டளித்ததால் தான், அது, மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்தது. இதை பா.ஜ., மறக்காது என நம்புகிறேன். மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்த லில், பா.ஜ., தனித்து போட்டியிட்டது. அதனால் தான், இரண்டாவது இடத்தை பிடித்தது.

எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், அக்கட்சி முதலிடத்தை பிடித்திருக்கும். அமித் ஷா, நட்டா ஆகியோரிடம் எங்கள் கோரிக்கையை தெரிவித்தேன். கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த அவர்கள்,பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
26-ஜூன்-202109:22:49 IST Report Abuse
Venkataramanan Thiru டிபிபிறேன்ட் ஸ்டேட்ஸ் டிபிபிறேன்ட் ஸ்ட்ராட்டஜிஸ்?
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
24-ஜூன்-202116:46:32 IST Report Abuse
தஞ்சை மன்னர் """ உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து பேசினார். "" பேசினார் என்று போடாதீர்கள் மிரட்டினார் என்று போடுங்கள்
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்கெஞ்சினார்னு போட்டாத்தானே "நடுநிலை" யாக இருக்கும்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X