சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்: வாலிபரின் அடாவடி 'வீடியோ'வால் அதிர்ச்சி

Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோவை:கோவையில் கல்லுாரி மாணவிகளுடன் பழகி புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த வாலிபர் மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்ட நிலையில், வாலிபரின் அடாவடி 'வீடியோ'க்கள் வெளியாகி உள்ளன.கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த 19வது மாணவி, தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் கல்லுாரி படிப்பை பாதியில் கைவிட்ட கேசவகுமார்(எ) விஜய சேதுபதி,24
 மாணவியரை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல்: வாலிபரின் அடாவடி 'வீடியோ'வால் அதிர்ச்சி

கோவை:கோவையில் கல்லுாரி மாணவிகளுடன் பழகி புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த வாலிபர் மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்ட நிலையில், வாலிபரின் அடாவடி 'வீடியோ'க்கள் வெளியாகி உள்ளன.

கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த 19வது மாணவி, தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் கல்லுாரி படிப்பை பாதியில் கைவிட்ட கேசவகுமார்(எ) விஜய சேதுபதி,24 என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின், இருவரும் நெருங்கி பழகியதுடன், போட்டோ எடுத்து கொண்டனர்.அவ்வப்போது மாணவியிடம் குடும்ப கஷ்டத்தை சொல்லி வாலிபர் பணம், நகைகளை பெற்று வந்தார். ஒரு கட்டத்தில் மாணவி பணம் கொடுப்பதை நிறுத்தியபோது, வாலிபரின் உண்மையான சுயரூபம் தெரிந்தது.

பணம் கொடுக்கவில்லை என்றால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவதாக மிரட்டினார். இதன் பின்னணியில், வாலிபரின் தாய் மற்றும் ஒரு கும்பலே உடந்தையாக இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்த மாணவி, தற்கொலை செய்து கொண்டார்.சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, கேசவகுமார் மற்றும் அவரது தாய் மங்கயர்க்கரசி, 46 ஆகியோரை கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது கேசவகுமாரின் சில 'அடாவடி' வீடியோக்கள் வெளியாகி உள்ளன.அந்த வீடியோக்களில், கல்லுாரி மாணவர்கள் சிலரை ஒரு அறையில் அடைத்து வைத்து கும்பலாக சேர்ந்து தாக்குவதும், அவர்கள் காதலிக்கும் மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை கேட்டு மிரட்டுவதும் பதிவாகியுள்ளது. இவர்கள் ஒரு பெரிய கும்பலாக செயல்பட்டு வந்ததும், இந்த கும்பலிடம் பல்வேறு கல்லுாரி மாணவிகள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

மேலும், பெரிய பட்டா கத்தியுடன் ரோட்டில் வலம் வருவது, கல்லுாரி மாணவர்களை ரோட்டில் கும்பலாக தாக்குவது போன்ற வீடியோ பதிவுகளும் இடம்பெற்றுள்ளன. கேசவகுமார், ஏற்கனவே தான் இரண்டு முறை சிறைக்கு சென்று வந்ததாகவும், போலீசில் புகார் அளித்தால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும், கல்லுாரி மாணவியின் பெற்றோரை மிரட்டி உள்ளார்.இதன்பின் தான் பயத்தில் அந்த மாணவி தற்கொலை செய்தார். தற்போது வெளியாகியுள்ள வாலிபரின் வீடியோக்கள் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Radhakrishnan - Marthandam, Nagercoil,இந்தியா
30-ஜூன்-202112:46:04 IST Report Abuse
Radhakrishnan இந்த வயதிலேயே இந்தமாரி கிரிமினல் வேல பாத்துருக்கண்ணா வளர்ந்தால் என்னென்ன பண்ணுவான். அதனால் இப்போவே முடிச்சு விட்டுரனும், இவனெமாதிரி ஆட்கள் இந்த நாட்டிற்கு தேவை இல்லை.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
30-ஜூன்-202107:06:38 IST Report Abuse
NicoleThomson இது போன்ற வீரர்கள் கழகத்தின் வீட்டு பெண்களை தொடும்போது தான் இவர்கள் மீது பாப்ஜி ஒப் கேஸ் மாதிரி ஹைலைட் பண்ணி போடுவானுங்க இல்லையா எந்த பொண்ணு செத்தா எனக்கென்ன என்று தெனாவெட்டா போயிடுவானுங்க , அனிதாவின் வயதில் ஒரு பொண்ணு தற்கொலை பண்ணிட்டு இருக்கா கார்பொரேட் குடும்ப கழகத்தின் ரியாக்ஷன் என்ன என்று பாருங்க
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
26-ஜூன்-202118:24:13 IST Report Abuse
Nesan இது தான் முந்தய அரசின் லட்சணம். குடிபோதையில் உளறுபவனை, வீர மிக்க காவலர் அடித்து, இறந்துவிட்டார். இந்த காம கொடூரனை மற்றும் சம்மந்த பட்டவர்களை ஏன் விட்டு வைத்து இருக்கார். அரசு உடனே நடவடிக்கை எடுக்குமா???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X