பொது செய்தி

இந்தியா

'டெல்டா பிளஸ்' வகை வைரசால் 3 மாநிலங்களில் 40 பேர் பாதிப்பு

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி:அதிக வீரியம் உடைய, உருமாற்றம் அடைந்த, 'டெல்டா பிளஸ்' வகை தொற்றுக்கு, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளாவில், 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.உலகம் முழுதும் கடந்த ஆண்டு முதல் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், குறிப்பிட்ட இடைவெளியில் உருமாற்றம் அடைந்து, அதிக வீரியம் உடைய வைரசாக மாறி வருகிறது.இந்த உருமாற்றம்
டெல்டா பிளஸ், வைரஸ், 3 மாநிலங்கள், 40 பேர் பாதிப்பு

புதுடில்லி:அதிக வீரியம் உடைய, உருமாற்றம் அடைந்த, 'டெல்டா பிளஸ்' வகை தொற்றுக்கு, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளாவில், 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

உலகம் முழுதும் கடந்த ஆண்டு முதல் பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், குறிப்பிட்ட இடைவெளியில் உருமாற்றம் அடைந்து, அதிக வீரியம் உடைய வைரசாக மாறி வருகிறது.இந்த உருமாற்றம் நிகழும் போது, வைரஸ் பரவும் வேகமும், மனிதர்கள் உடலில் அது ஏற்படுத்தும் பாதிப்புகளும் பல மடங்கு உயர்கிறது.



ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டாவது அலை உருவானது. இதற்கு, உருமாறிய, 'ஆல்பா' வகை தொற்றே காரணமாக அமைந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல், நம் நாட்டில் உருவான இரண்டாவது அலைக்கு, 'டெல்டா' வகை வைரஸ் காரணம் என்பது ஆய்வில் தெரியவந்தது. இந்த டெல்டா வகை, தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து, 'டெல்டா பிளஸ்' வகையாக உருமாறி உள்ளது.

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பிரிட்டன் சுகாதாரத்துறை, ஏ.ஒய்.1 எனப்படும், 'டெல்டா பிளஸ்' வகை தொற்றை, கடந்த, 11ம் தேதி கண்டறிந்து அறிவித்தது. உலகம் முழுதும், 205 பேருக்கு
இவ்வகை தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, நம் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில், மஹாராஷ்டிராவில், டெல்டா பிளஸ் வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதுவரை, 45 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் கேரளாவில் டெல்டா பிளஸ் வகை கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொற்று, 'விஓசி' எனப்படும், கவலை அளிக்க கூடிய வகையாக அடையாளப்படுத்த பட்டுள்ளது.
இந்த மூன்று மாநிலங்களிலும் கண்காணிப்பை அதிகரிக்கவும், பொது சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்காவின் ஒன்பது நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள டெல்டா பிளஸ் வகை வைரஸ், நம் நாட்டில் குறைந்த அளவிலேயே உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


'டெல்டா பிளஸ்' அச்சம் தேவையில்லை!



மஹாராஷ்டிராவில், ரத்னகிரி, ஜல்காவ்ன், மும்பை, பால்கர், தானே, சிந்துதுர்க் மாவட்டங்களில், 21 பேருக்கு, 'டெல்டா பிளஸ்' வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அம்மாநில கொரோனா தடுப்பு படை உறுப்பினர் டாக்டர் சஷாங்க் ஜோஷி கூறியதாவது:'டெல்டா பிளஸ்' வகை வைரஸ் குறித்து அச்சப்படும் படியான தரவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. ஆனால், பரவும் தன்மை அதிகமாக இருக்கும். எனவே, முக கவசம் அணிவது, கூட்டம் கூடாமல் இருப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
24-ஜூன்-202107:52:50 IST Report Abuse
blocked user கேரளா மாடல் இப்பொழுதுதான் வேலை செய்கிறது போல...
Rate this:
Cancel
24-ஜூன்-202107:34:30 IST Report Abuse
ஆப்பு அச்சம் வேண்டாம். பயம் வேண்டாம். நிறைய பரவினா, அடிச்சு, துவச்சு , வெளுத்து, காயப்போட்டு முடக்க ஒன்றிய, மாநில அரசுகள் போலுசுடன் ரெடியா இருக்காங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X