சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹரியானாவில் சிக்கினான் ஏ.டி.எம்., கொள்ளையன் :தனிப்படை அதிரடி

Updated : ஜூன் 25, 2021 | Added : ஜூன் 23, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
சென்னை :சென்னையில், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில், நுாதன முறையில், 1 கோடி ரூபாய்க்கும் மேல் வாரி சுருட்டிய, வட மாநில கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவன், ஹரியானாவில் தனிப்படை போலீசாரிடம் சிக்கினான். இது தொடர்பாக, மேலும் மூவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், கூட்டாளிகள் அனைவரையும் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில், பல்வேறு இடங்களில் உள்ள
ஏ.டி.எம்., கொள்ளையன், ஹரியானா, சிக்கினான்

சென்னை :சென்னையில், எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில், நுாதன முறையில், 1 கோடி ரூபாய்க்கும் மேல் வாரி சுருட்டிய, வட மாநில கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவன், ஹரியானாவில் தனிப்படை போலீசாரிடம் சிக்கினான்.
இது தொடர்பாக, மேலும் மூவரிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், கூட்டாளிகள் அனைவரையும் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையில், பல்வேறு இடங்களில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின், 'டிபாசிட்' செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம்., மிஷின்களில், நுாதன முறையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் மர்ம நபர்கள் கொள்ளைஅடித்தது தெரிய வந்தது.இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து, எஸ்.பி.ஐ., சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வங்கி அதிகாரிகளுடன், கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, பணம் கொள்ளையடிக்கப்பட்ட மிஷினின் தன்மை பற்றி போலீசாரிடம் விளக்கினார்.




2.20 லட்சம் மிஷின்கள்



எஸ்.பி.ஐ., வங்கி, பணம் எடுப்பது மற்றும் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம்., மிஷின்களை, இரு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து, நாடு முழுதும் 2.20 லட்சம் மிஷின்களை நிறுவி உள்ளது. இவற்றில், ஓ.கே.ெஜ., என்ற நிறுவனத்திடம் கொள்முதல் செய்யப்பட்ட மிஷின்களில் தான் கொள்ளை நடந்துள்ளதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அந்த வகையில், வட மாநில கொள்ளையர்களில் இருவர், ஜூன் 17ம் தேதி காலை, தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியின் டிபாசிட் செய்யும் ஏ.டி.எம்., மிஷினில், 70 ஆயிரம் ரூபாய் திருடி உள்ளனர்.அதேபோல், ராமாபுரம், திருவள்ளுவர் சாலையில் உள்ள ஏ.டி.எம்.,மில் 1.50 லட்சம் ரூபாய்; தரமணியில் 7 லட்சம் ரூபாய்; வேளச்சேரியில் 5 லட்சம் ரூபாய்; வடபழநி 100 அடி சாலையில், 69 ஆயிரம் ரூபாய் என, 1 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளைஅடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் மட்டும், 1 கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளைஅடிக்கப்பட்டுள்ளது.


'கூகுள் மேப்' உதவி



கொள்ளையரை பிடிக்க, சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர், மத்திய புலனாய்வு அமைப்பான ஐ.பி.,யில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். தனிப்படை போலீசாரின் விசாரணையில், 2013, 2014ல் ஆஸ்திரேலியா மற்றும் ருமேனியா நாடுகளில் இதுபோல் நடந்திருப்பது தெரிய வந்தது. இதை பின்பற்றி, ஹரியானா மற்றும் டில்லியைச் சேர்ந்த கும்பல், வங்கி ஏ.டி.எம்., கொள்ளையில்
ஈடுபடுவது தெரிய வந்தது.
இதையடுத்து, சென்னையில் 'சிசிடிவி' கேமராவில் சிக்கிய மர்ம நபர்கள் குறித்து, ஹரியானா மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த மாநில போலீசார், கொள்ளையர் குறித்து தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற போலீசார், கொள்ளை கும்பலைச்யசேர்ந்த முக்கிய குற்றவாளி அமீர், 37, என்பவரை கைது செய்துள்ளனர்; மேலும், மூவரை பிடித்துவிசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 'கூகுள் மேப் உதவியுடன், இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. ஏ.டி.எம்.,மில் உள்ள தொழில்நுட்ப கோளாறு குறித்து, இவர்களுக்கு எப்படி தெரியும்; கொள்ளைக்கு, சென்னையை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடக்கிறது' என்றனர்.


14 ஏ.டி.எம்.,களில் கைவரிசை



போலீசாரிடம், அமீர் அளித்துள்ள வாக்குமூலம்: ஹரியானா மாநிலம், பரிதாபாத் மாவட்டம், பல்லப்கர்க் பகுதியில் வசித்து வருகிறேன். நானும், என் கூட்டாளிகளும் ஐந்து குழுக்களாக பிரிந்து, சென்னையில் ஜூன் 15ல் இருந்து 18 வரை, எஸ்.பி.ஐ., வங்கியின், 14க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.,களில் இருந்து கொள்ளையடித்தோம். என்னிடம் இருந்து போலீசார், 4.50 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.மற்ற வங்கி ஏ.டி.எம்., கொள்ளையர்களை பிடிக்க, தனிப்படை போலீசார், ஹரியானாவில் முகாமிட்டுள்ளனர்.


அந்த 20 வினாடிகள்...



எஸ்.பி.ஐ., வங்கியின் பணம் டிபாசிட் செய்யும் வசதியுள்ள ஏ.டி.எம்.,மில், 20 வினாடிகள் தாமதித்தால் பணம் மீண்டும் உள்ளே சென்றுவிடும். கொள்ளையர்கள், இந்த 20 வினாடிகளைத்தான் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சுருட்டி உள்ளனர்.
போலி ஆவணங்கள் வாயிலாக பெறப்பட்ட ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி கொள்ளையர்கள், டிபாசிட் மிஷின்களில் பணம் எடுத்துள்ளனர். பணத்தை எடுத்த உடனேயே, சென்சார் பகுதியை மறைத்து, மூட வேண்டிய ஷட்டரை 20 வினாடிகள் பிடித்து, மீண்டும் விட்டுள்ளனர். இதனால், ஏ.டி.எம்., மிஷின், பணத்தை கொடுத்த பின்னும், இருப்பு காட்டுகிறது. ஆனால், மிஷினில் பணம் இல்லை. இந்த முறையை பயன்படுத்தி தான், கொள்ளை நடந்துள்ளதாக, வங்கி அதிகாரிகள் கமிஷனரிடம் விளக்கம் அளித்தனர்.


ஒரே மிஷினில் 190 முறை...



சென்னை பெரியமேடு பகுதி, வேப்பேரி நெடுஞ்சாலையில், எஸ்.பி.ஐ., வங்கியின், டிபாசிட் செய்யும் ஏ.டி.எம்., மிஷின் உள்ளது. கொள்ளையர்கள் இந்த மிஷினில் மட்டும், 15 முதல் 17ம் தேதி வரை, 190 முறை ஏ.டி.எம்., கார்டுகளை பயன்படுத்தி, 15 லட்சத்து, 71 ஆயிரத்து, 300 ரூபாயை எடுத்துள்ளனர். கொள்ளையர்களின் உருவம், 19 இடங்களில் உள்ள, 'சிசிடிவி கேமரா'க்களில் பதிவாகி உள்ளது. கொள்ளை குறித்து, இதுவரை 21 புகார்கள் பெறப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள், மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஜூன்-202106:14:44 IST Report Abuse
meenakshisundaram அட இதுலே கூட அந்த வட இந்தியன்தான் திராவிடனை மிஞ்சின 'அறிவு' வச்சிருக்கான்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
24-ஜூன்-202120:29:51 IST Report Abuse
Krishnamurthy Venkatesan எந்த ஒரு மென்பொருளையும் பயன்பாட்டுக்கு தரும் முன்னர் DEBUGGING செய்து பார்ப்பார்கள். நெகடிவ் வேல்யூஸ் ( NEGATIVE VALUES) போட்டு சரியாக வேலை செய்கிறதா என பார்ப்பார்கள். தவறு இருந்தால் அதை சரி செய்து விடுவார். அதேதான் வன்பொருளுக்கும் (HARDWARES) செய்து பார்ப்பார்.
Rate this:
Cancel
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
24-ஜூன்-202118:13:40 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் டுமீல் நாட்டு அரசியல்வாதிக்கு மிச்சமே வைக்கமாட்டாநுவோ போலிருக்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X