விடுதலையாகிறார் 'மாஜி' முதல்வர்

Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி :ஊழல் வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள, ஹரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, 86, விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. கடந்த, 2000ம் ஆண்டில், மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. இதில், ஐ.என்.எல்.டி., எனப்படும் இந்திய தேசிய லோக்
 
விடுதலையாகிறார்   'மாஜி' முதல்வர்

புதுடில்லி :ஊழல் வழக்கில், 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள, ஹரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, 86, விரைவில் விடுதலை செய்யப்பட உள்ளார்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. கடந்த, 2000ம் ஆண்டில், மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரித்தது. இதில், ஐ.என்.எல்.டி., எனப்படும் இந்திய தேசிய லோக் தளத் தலைவரும், முன்னாள் முதல்வருமான, ஓம் பிரகாஷ் சவுதாலா, அவருடைய மகன், அஜய் சவுதாலா உட்பட, 56 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.


latest tamil news


இதில், ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
கொரோனா பரவல் காரணமாக, சிறைகளில் நெரிசலை குறைக்க, டில்லி அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏழு முதல் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்று, ஐந்து மாதங்களே பாக்கி உள்ளவர்கள், விடுவிக்கப்பட உள்ளனர்.
கடந்த, 2013ல் சிறையில் அடைக்கப்பட்ட சவுதாலா, கடந்தாண்டு, மார்ச்சில், அவசர பரோலில் விடுவிக்கப்பட்டார். கொரோனா பரவல் காலத்தில், அது இரு முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு மேலும், மூன்று மாத தண்டனையே பாக்கி உள்ளது.
தற்போது டில்லி அரசின் புதிய உத்தரவால், அவர் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம். உரிய நீதிமன்றத்தில் அவர் ஆஜரான பிறகு, விடுதலை செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
24-ஜூன்-202113:31:49 IST Report Abuse
Tamilnesan இந்தியாவில் நீதிமன்றங்கள் என்கிற அமைப்பு இருந்தால் இவர் போன்றவர்கள் எப்போதோ தூக்கிலிடபட்டிருக்க வேண்டும்.
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - தொங்கவிட்டான்பட்டி,யூ.எஸ்.ஏ
24-ஜூன்-202107:57:22 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN எங்க தயிர்வடைய எந்த சட்டமாவது தொட்டு பார்க்க முடிஞ்சுதா ?
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-202106:43:18 IST Report Abuse
 rajan குடுகுடு கெழவனை எல்லாம் ஜெயிலில் போட்டு என்னத்த சாதிக்கப் போறிங்க. அரசு செலவில் ஒசிச் சோறு வேஸ்ட். முறைகேடாக சம்பாதித்த பணம் மற்றும் சொத்துக்களை பிடுங்கி அவரை தெருவில விடுவதே சிறந்த தண்டனை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X