பிரதமர் வீட்டில் 'காஷ்மீர் கூட்டம்' : மீண்டும் சிறப்பு அந்தஸ்தா; மறுவரையறையா?

Updated : ஜூன் 24, 2021 | Added : ஜூன் 24, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஜம்மு -- காஷ்மீர் தொடர்பாக, பிரதமர் நடத்த இருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. டில்லி, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில், மோடியின் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் 5ல், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, பிரிவு - 370, 35ஏ ஆகியன செயலிழக்க வைக்கப்பட்ட பின், முதன் முறையாக அந்த மாநிலத்தின் முக்கிய
பிரதமர் , 'காஷ்மீர் கூட்டம்', மீண்டும் சிறப்பு அந்தஸ்தா;,

ஜம்மு -- காஷ்மீர் தொடர்பாக, பிரதமர் நடத்த இருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டம் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. டில்லி, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில், மோடியின் தலைமையில் இன்று இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 2019 ஆகஸ்ட் 5ல், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, பிரிவு - 370, 35ஏ ஆகியன செயலிழக்க வைக்கப்பட்ட பின், முதன் முறையாக அந்த மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களை மோடி சந்திக்கிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் உருவாக்கித் தந்துள்ள திட்டத்தின்படி, இந்த கூட்டம் நடைபெறுகிறது.

பங்கேற்போர்
குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஏழு கட்சிகளும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றன. டாக்டர் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத், மக்கள் மாநாட்டு கட்சியின் சஜத் லோனே, ஜம்மு - காஷ்மீர் அப்னே கட்சியின் சையத் அல்டாப் புகாரி, ஜம்மு - காஷ்மீர் பேந்தர்ஸ் கட்சி தலைவர் பேராசிரியர் பீம் சிங் போன்ற முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.


நோக்கம்கூட்டத்தின் நோக்கத்தை, மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அதே நேரத்தில், பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து கொடுப்பதற்காக, இந்த கூட்டம் நடத்தப்படுகிறது என்று கூறப்படுகிறது.
அதேநேரம், தொகுதி மறுவரையறைக்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த மாதம் முதல் வாரத்தில், தொகுதி மறுவரையறை செய்யும் பணி, ஜம்மு - காஷ்மீரில் துவங்கியது. அந்தப் பணிக்கு, அரசியல் அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சி தான் இது என்றும் கூறப்படுகிறது.


சொல்லப் போவது என்ன?இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் கட்சிகள் அனைத்தும், பா.ஜ., நீங்கலாக, ஜம்மு - காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும். குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி, ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தையும் சேர்த்து வலியுறுத்தும். '2019 ஆகஸ்ட் 5ம் தேதிக்கு முந்தைய நிலை' மீண்டும் ஜம்மு - காஷ்மீரில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதே, அந்தக் கூட்டணியின் நிலைப்பாடு.

அதேநேரம், மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் காங்கிரஸ், சட்டப்பிரிவு - 370 மீண்டும் கொண்டு வரப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு மவுனம் சாதிக்கிறது. 'சட்டப்பிரிவு - 370ஐ மீண்டும் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்துவீர்களா?' என்று கேட்டபோது, குலாம் நபி ஆசாத் பதிலளிக்க மறுத்து விட்டார்.என்றாலும், ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை, மீண்டும் தருவதற்கோ; சட்டப்பிரிவு - 370ஐ மீண்டும் கொண்டு வருவதற்கோ, இனி வாய்ப்பே இல்லை என்பதை நாம் உறுதியாக கூற முடியும்.


கூட்டத்துக்கான காரணம்'ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகும் நிலையில், திடீரென இத்தகைய கூட்டத்தை பிரதமர் ஏன் கூட்ட வேண்டும்? இன்னும் சில காலம் கழித்து கூட கூட்டியிருக்கலாமே... இப்போது என்ன அவசரம்?' என்ற கேள்விகள் எழுகின்றன.
இந்த ஆண்டு செப்., 21க்குள், ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க துருப்புகள் முழுமையாக வெளியேற உள்ளன. இதனால், தலிபான் பிடியில் மொத்த ஆப்கனும் வரவுள்ளது. எனவே, ஆப்கனில் தீவிர கவனம் செலுத்தி வந்த பாகிஸ்தானின் உளவுப் பிரிவான, ஐ.எஸ்.ஐ.,க்கு இனி வேலையிருக்காது.

இனிமேல் அது, நம் மீது தனி கவனம் செலுத்த துவங்கும். குறிப்பாக, ஜம்மு - காஷ்மீரை குறிவைக்கும்.மேலும், ஆப்கனில் தாலிபான்களுக்கு போதுமான ஓய்வு கிடைக்கவுள்ளதால். அவர்களும் காஷ்மீர் நோக்கி கவனத்தை திருப்பலாம்.எனவே, செப்டம்பருக்குள் ஜம்மு - காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை துவங்கி விட வேண்டும் என்பதற்காக, இந்த கூட்டம் கூட்டப்படுகிறது என வியூக வகுப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.


கத்தாரில் சந்திப்புஇந்தக் கருத்து சரி என்பதை நிரூபிக்கும் வகையில், இந்திய அதிகாரிகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.இந்திய வெளியுறவுத் துறையின் உயர் அதிகாரிகளுக்கும், தலிபானின் முக்கிய தளபதிகளுக்கும் இடையே ரகசிய பேச்சு, கத்தார் நாட்டில் நடந்திருக்கிறது. இதை, கத்தார் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தீர்வு துறையின் சிறப்பு துாதர் முத்லக் பின் மஜீத் அல் க்வாதானி
உறுதிப்படுத்தியுள்ளார்.


தோவலுடன் சந்திப்புஇதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கடந்த வெள்ளிக்கிழமை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடன் உரையாடினார்; ஜம்மு - காஷ்மீரின் கவர்னர் மனோஜ் சின்காவுடனும் பேச்சு நடத்தினார்; உளவுப் பிரிவு தலைவர்களுடனும்
பேசியுள்ளார்.


ஜம்முவில் கோபம்வரலாற்று சிறப்பு மிக்க 'காஷ்மீர் கூட்டத்தை' பிரதமர் மோடி நடத்தினாலும், ஜம்மு பகுதியில் அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காஷ்மீரத்து அரசியல்வாதிகள் மட்டுமே, பிரதமரின் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஜம்மு பகுதி கட்சிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனக் கூறி, ஜம்முவில் உள்ள ராணி பூங்காவில், டோக்ரா முன்னணி தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.'சட்டப்பிரிவு - 370ஐ மீண்டும் கொண்டு வர, சீனா உதவ வேண்டும்' என, பரூக் அப்துல்லா கோரினார். பார்லிமென்ட் பற்றி அவதுாறாகப் பேசினார், மெகபூபா முப்தி. இவர்களுக்கெல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், ஜம்முவின் தேச பக்தியுள்ள தேசியவாத தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர் என்று, டோக்ரா முன்னணியின் தலைவர் அசோக் குப்தா கூறியுள்ளார். 'காஷ்மீர் கட்சிகளிடம் மோடி சரணடைந்து விட்டார்' என, ஐக்கிய ஜம்மு கட்சித் தலைவர் அங்குர் சர்மா சாடியிருக்கிறார்.இவற்றுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை, மோடியின் காஷ்மீர் கூட்டம் ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news

குப்கர் பிரகடனம் என்றால் என்ன?கடந்த 2019 ஆகஸ்ட் 4ம் தேதி, அதாவது, சட்டப்பிரிவு - 370 நீக்கப்படுவதற்கு ஒரு நாள் முன், -ஸ்ரீநகரில் குப்கர் சாலையில் உள்ள பரூக் அப்துல்லா இல்லத்தில், காஷ்மீர் தலைவர்கள் ஒன்று கூடி கூட்டறிக்கை வெளியிட்டனர். அந்தக் கூட்டறிக்கையே, குப்கர் பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது. அதில், 'காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தில் கைவைக்கக் கூடாது' என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. பின், 2020 அக்டோபர் 15ம் தேதி மீண்டும் பரூக் அப்துல்லாவின், அதே வீட்டில் கூடிய தலைவர்கள், பழைய பிரகடனத்தில் கையெழுத்திட்டு, அந்த பிரகடனத்தின் படி கூட்டணியாக இருப்பது என உறுதியெடுத்துக் கொண்டனர். அதுவே, 'குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி!'அந்தக் கூட்டணியில் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., அப்துல் கனி லோனியின் மக்கள் மாநாட்டு கட்சி, ஜம்மு - காஷ்மீர் மக்கள் இயக்கம், அவாமி மக்கள் மாநாட்டு கட்சி ஆகிய ஏழு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. கோலாகல ஸ்ரீநிவாஸ் பத்திரிகையாளர் இ- - மெயில்: kolahala2014@hotmail.com

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
24-ஜூன்-202113:24:22 IST Report Abuse
Sandru குரங்கின் கையில் பூமாலை. மோடியின் கையில் இந்தியா.
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
24-ஜூன்-202113:15:32 IST Report Abuse
திரு.திருராம் ஜம்முவில் கோபம்-தேவையில்லை, நாட்டுப்பற்றுள்ள உங்களைக் கூப்பிடாமல் தேசவிரோதிகளுக்கு மட்டும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதால், கண்டிப்பாக சிவாஜி பட ஆபீஸ்ரூம்பு ட்ரீட்மெண்ட் ஏதோ நடக்கப்போகிறது, எனவே நீங்கள் அமைதிகாக்கவும், அவர்கள் வெளியே வரும்போது, அப்படியேசெய்துகலாம் என பதிலோடு வருவார்கள்,
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
24-ஜூன்-202109:30:34 IST Report Abuse
SKANDH காஷ்மீருக்கு எந்த காரணம் கொண்டும் மாநில அந்தஸ்து தரக்கூடாது. 370,35 எந்த காரணம்கொண்டும் திரும்பக்கூடாது . போனது போனது தான் .எல்லை பாதுகாப்பையம்,உள்நாட்டு பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் . பொருளாதாரத்தை அப்புறம் பார்க்கலாம் . இந்தியா எல்லை நாற்புறமும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அதுவே முக்கியம் .காஷ்மீருக்கு தனி மாநில அந்தஸ்த்து தராதீங்க. வேண்டுமானால் புதுச்சேரி போல இருக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X